ஓ...காதல் நெஞ்சே 13-18

ஓ...காதல் நெஞ்சே 13-18

அத்தியாயம்-13

ஷ்ரவன் விலகிப் படுத்ததும் ஹரிதாவிற்கு என்ன செய்ய என்று தெரியவில்லை அப்படியே கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்தாள்... 

அவளது மூளைக்கு ஒன்றும் எட்டவில்லை. அவனை சமாதானப் படுத்தும் வழியும் அவளுக்கு தெரியவில்லை... ‘ரொம்பக் கோபமா இருங்காங்களே, எப்படியாவது சமாதானப்படுத்தனம்’ என்று நினைத்தவள்.

"ஷ்ரவன்...ஷ்ரவன்" என்று அவனை அழைக்க அவன் அசைந்தான் இல்லை... மறுபடியும் அவனை இரண்டு மூன்று தடவை அழைத்துப் பார்த்தும் அவன் அவளது அழைப்பிற்கு செவி கொடுத்தான் இல்லை... அவனது அருகில் சென்று அவனது தோளைப் பிடித்து தன் பக்கமா திருப்பினாள்... அவளது கையை உதறி எழுந்து அமர்ந்தான்.

ஷ்ரவன் கோபத்தில் "என்னடி பிரச்சினை உனக்கு.. பேசாம தானே படுத்திருக்கேன். உன்கிட்ட பேச பிடிக்கலைனு ஒதுங்கி படுத்திருக்கேன்.. எதுக்கு என்னை தொந்தரவு பண்ற"என்று சொல்லிவிட்டு அமைதியாக திரும்பிப் படுத்தான்...

அவனது கையைப் பிடித்து நான் சொல்றது கொஞ்சம் கேக்குறீங்களா என்றவள் " என் மேல எந்த தப்பும் இல்ல.... மியா சொன்னதை நான் நம்பிட்டேன். எல்லாரும் ஏன் அவளை விட்டுட்டு எனக்கு மட்டும் தண்டனை கொடுக்கறீங்க” என சிறுபிள்ளையாக அழுதாள். மியா இல்லைனா இந்தப் பிரச்சனையே வந்திருக்காது...

“உங்ககிட்ட நான் இதைபற்றி கேட்கணும்னு இருந்தேன்...கல்யாணத்துக்கு முந்தின நாள் சொன்னாதான் எல்லோருக்கும் தெரியும்...பெரியவங்க சேர்ந்து உங்களுக்கும் மியவிற்கும் கல்யாணம் செய்து வச்சிடுவாங்கனு நினைச்சி செய்தேன்...அவளும் பாவம்னு நினைச்சேன்” என்று சொல்லி முடிக்கும் முன்பாக தரையில் விழுந்திருந்தாள்...

ஷ்ரவன் அவளை அடித்திருந்தான்...

“பைத்தியக்காரி அந்த இராட்சஷி நமக்குள்ள பிரச்சனை வரணும்னே செய்திருக்கா..நீ ஒருபடி மேலப் போய் கல்யாணத்தை நிறுத்த பிளான் போட்டு பிரச்சனை செய்திருக்க...

ம்ம்..எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு.

மியாவை நம்பினேன் சொல்ற.அவ உனக்கு யாருடி?ஒருவாரப் பழக்கத்துல அவளை நம்பினேனு சொல்ற... அப்போ என்மேல் நம்பிக்கை இல்லை.என் மேல சந்தேகம் வந்திட்டு... அதுதான நீ சொல்றதுக்கு அர்த்தம்” என்று கோபத்தில் அவளிடம் நெருங்கினான்...

அவனது கோபத்தை பார்த்த அவள் சட்டென்று தன்னுடைய கண்களை மூடி பின்பக்கம் விலகி அமர்ந்தாள்.... “என்னிடம் வாங்கிக் கட்டிக்காத பேசாம படுத்து தூங்கு நேத்துல இருந்து உன்னால் எனக்கு தூக்கம் வரல தலை வலிக்குது நான் தூங்க போறேன், என்னை தொந்தரவு பண்ணாதே புரியுதா...” என்று சொன்னவன் படுக்கப் போகும்போது ஞாபகம் வந்தவன்.

மறுபடியும் அவளைப் பார்த்துத் திரும்பினான்... “நேத்து நீ சத்தம் போட்டு பேசினதுல எல்லாரும் ஒன்றை கவனிக்காம விட்டுடாங்க...நான் கவனிச்சேன், நீ பேசிய வார்த்தைகளை. 

அம்மா கிட்ட பேசும்போது என்ன சொன்ன என்கிட்டயும் உங்க மகன் அப்படித்தான் நடந்து கொண்டான் அப்படித்தான,இதை யாருமே கவனிக்காம விட்டுட்டாங்க,

ஆனால் நான் கவனிச்சேன் நீ என்ன அர்த்தத்தில் சொன்ன.

என்ன பத்தி உனக்கு என்னவொரு உயர்வான எண்ணம்.. உன்னை என் மனைவியா, என்னோட உயிராதானடி நினைத்தேன்...அதுக்கு அர்த்தம் இல்லாம பண்ணிட்டியே ...அந்த ஒரு வார்த்தையில் என்னை உயிரோடு கொன்னுட்டியே...ஒரு நாள் ஒரு நிமிஷங்கூட என்னோட காதலை உணரமுடியலையா.

உடம்பைத்தான் உணர்ந்தியா...என்றவன். தன் ஒரு விரலை காட்டி அவளை மிரட்டியவன் என் பக்கத்தில் கூட வராத கொன்றுவேன்.

நான் செய்த தப்புக்கு உனக்கு என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்துட்டேன். தாலி கட்டி மனைவியா ஏத்துக்கிட்டேன். யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் பண்ணதில்லை.. யாரையும் ஏமாற்றுயதுமில்லை. ஷ்ரவன் அப்படிப்பட்டவனும் இல்லை” என்று அப்படியே கட்டிலில் கவிழந்துப் படுத்துவிட்டான்.

ஹரிதாவிற்கு என்ன பேசினோம்னு எதுவுமே ஞாபகம் இல்லை... கோபத்தில் வார்த்தைகளை இறைத்துவிட்டாள்... இனி திரும்ப அள்ள முடியாது. அதனால் ஏற்பட்ட காயங்கள் ஷ்ரவனின் மனதில் ஆழமாக இருந்தது...அதை எப்படி மாற்றப் போகிறாள் என்பதே இப்போதைய வினா...

தனது உடம்பை குறுக்கி அந்த பெட்டில் அப்படியே சரிந்து படுத்தவள் எப்போது தூங்கினாள் என்று தெரியாது...

காலையில் எழுந்து ஷ்ரவன் திரும்பிப் பார்க்க சிறுபிள்ளை போல கால்களை குறுக்கி யாருமற்றவள் போல படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்...

ஷ்ரவனுக்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது...அவளை அப்படியே தூக்கி மடியில் வைத்துக்கொள்ளத்தான் கைககள் பரபரத்தன. அவன் கட்டிய தாலி அப்படியே வெளியே வந்து கிடந்தது...அதைப் பார்த்தவனுக்கு. எவ்வளவு சந்தோசமாக எதிர்பார்த்து நாளிது...எப்படி விடியுதுபாரு என்று நொந்துக்கொண்டவன்...பார்த்திட்டே இருந்தால் மனசு அவப்பக்கம் சாய்ஞ்சிடும் என்று எழும்பி குளித்துக் கீழே சென்றுவிட்டான்.

தூக்கத்திலிருந்து தானாக எழும்பியவள் சுற்றிமுற்றிப் பார்க்க,அறையில் யாரும் இல்லை என்று பார்த்தவள்.

குளித்துமுடித்து தனக்காக உடையை தேடியவள் எந்த உடையைப்போட என்று யோசித்து...

கடைசியாக சேலையைக் கட்டியவள் எங்கு செல்ல என்று தெரியாமல் கட்டிலில் அமைதியாக இருந்தவளுக்கு பசி...காலையில் காபியும் குடிக்கலை...நேற்றிரவும் சரியாக சாப்பிடவில்லை.அப்படியே இருந்தவளுக்கு கண்ணீர் கன்னங்களில் இறங்கவுமாதான் உணர்ந்தவள் துடைத்துவிட்டு திரும்பவும் ஷ்ரவன் நின்றான்...

கணவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள், 

அதைக் கவனியாதவன் போல பேசினான் ... “கீழே எல்லாரும் காத்திட்டிருக்காங்க” என்றதும் எழும்பி அவனோடு நடந்தவள், கீழே சென்றதும் டைனிங் டேபிளில் இவர்களுக்காக காத்திருந்தனர்...

இவர்கள் சென்றதும்...நிருபமா “வாம்மா வந்து உட்காரு” என்று அவளிடம் பேச,அவரைப் பார்த்து புன்னகைத்தாள், உணவினைப் பரிமாறாவும் ஆரம்பிக்க யாருமே அவளை வேற்றாளாகப் பார்க்கவில்லை...அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வேலையாட்களிடம் பரிமாறச் சொல்லி சாப்பிட வைத்தார் நிருபமா...

சாப்பிட்டு முடித்ததும் அக்க்ஷராவின் இரு பிள்ளைகளும், ஹரிதா அத்தைனு அவளை சுற்றி சுற்றிவந்து அவளை வேறு சிந்தனையிலிருந்து திசை திருப்பியிருந்தனர்....

கிரஷ்ணா ஷ்ரவனுக்கு அழைத்து விருந்திற்கு நியபகப்படுத்தியிருந்தார் 

பெங்களூருக்கு செல்வதற்காக கிளம்பி வரவும், அக்ஷராவின் கணவன் ஸ்ரீராம் ஷ்ரவனிடம் சில விமான டிக்கெட்டுகளை கொடுத்து, “உங்க ஹனிமூனிற்கான டிக்கெட் எல்லாம் நம்ம ஏஜென்சி மூலமாக வந்துட்டு” என அவனது கையில் கொடுக்கவும்,

“வேண்டாம் அத்தான் அதை ஏஜென்சியிலயே திருப்பிக் கொடுத்து, டிக்கெட் எல்லாம் கேன்சல் பண்ண சொல்லுங்க. எனக்கு ஆபிஸ்ல புது ப்ராஜக்ட் ஆரம்பிக்க, நாளைக்கு ஜாயிண்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை, கிட்டதட்ட மூணு மாதம் இழுக்கும், எங்கயும் நகரமுடியாது...அதனால டிக்கெட் எல்லாம் கேன்சல் பண்ண சொல்லிடுங்க.

விருந்துக்கு போயிட்டு அப்படியே வேலையில் ஜாயின் பண்ணி விடுவேன். நம்ம ப்ளாட்லயே நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்லி கிளம்பினான்.

பெரியவர்கள் இதில் தலையிடவில்லை நிருபமா ஏற்கனவே சொல்லிவிட்டாரே,

நீதான் எல்லாவற்றையும் சரிபண்ணிக் கொண்டுவரணும் என...

ஹனிமூன் பிளான் எல்லாமே இருவரும் சேர்ந்து திட்டமிட்டதுதான்... ஆனால் இப்பொழுது இருக்கும் நிலையில் போவதற்கு மனதில்லை... அந்த சூழ்நிலை உருவாகுமானும் தெரியாது அதனாலதான் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டான்.

ஹரிதாவின் முகமே வெளிறி போயிற்று எல்லாமே நான் செய்த செயலுக்கான எதிர்வினை... பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது ஏண்டா நாம்ம இப்போ உயிரோட இருக்குறோம் என்ற எண்ணமே ஹரிதாவிற்கு இப்பொழுது மேலோங்கியிருந்தது.

இருவரும் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்றோம் என்று காரில் ஏறி அமர்ந்தார்...அந்தக் கார் திருமணத்திற்காக அவனின் அப்பாவின் பரிசு...ஒரு வாரத்திற்கு முன்பே கார் பரிசளித்துவிட்டார்....அந்த காரில் டிரைவர் வைத்து பெங்களூர் வரைக்கும் ஓட்டிக் கொண்டு வந்தனர்.

காரில் 6 மணி நேர பயணம்...காரில் அமைதி மட்டுமே அங்க ஆட்சி செய்தது.ஷ்ரவன் எதுவும் பேசமாட்டான் என்று ஹரிதாவிற்குத் தெரியும் ஆதலால் அப்படியே அவனின் மடியில் படுத்து தூங்கிவிட்டாள். அவனுக்கு அது அவஸ்தையாகிப்போனது...இவ இப்படியே பக்கத்துல இருந்தா சரிவராது என்று சில முடிவுகள் எடுத்திருந்தான்.

பெங்களூர் வந்து சேர்ந்ததும் கிருஷ்ணா வீட்டிற்கு விருந்திற்காக வந்திருப்பதால் எதுவும் சொல்லாமல் டிரைவரை திருப்பி அனுப்பியவன்...வீட்டினுள் சென்று அமைதியாகவே இருந்தான்.

இரவு உணவை முடித்துக் கொண்டு...ஹாலில் அமர்ந்தவன். கிருஷ்ணா மற்றும் சுமித்ராவிடம் “நான் என்னோட பிளாட்டுக்கு போறேன் ஹரிதா இங்கேயே இருக்கட்டும்... நாளையிலிருந்து நான் ஆபிசுக்குப் போறேன் அவ ஏற்கனவே லீவு எழுதி கொடுத்தது அப்படியே இருக்கட்டும். எனக்கு அங்க இருந்து வேலைக்கு போறது வசதியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

“மாப்பிள்ளை தெரியாம செய்த தப்பிற்கு ஏன் இப்படி?அவள் செய்தது தப்புனு அவளே உணரந்துட்டா.மறுபடி மறுபடி அவளுக்கு தண்டைனையா?...” என்று கிருஷ்ணா கேட்டார்.

ஷ்ரவன் “மாமா இது அவளுக்கு மட்டுமில்லை, அவளை உயிரா காதலிச்சதுக்கு எனக்கும் சேர்த்துதான் தண்டனை...நான் வர்றேன்” என்று சென்றுவிட்டான்.

யாருக்கும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை ஹரிதா அப்படியே சிலையாக நின்று விட்டாள். என்ன நினைத்து என்னை திருமணம் செய்தார், சண்டை போட்டா அப்படியே விட்டுட்டு போயிருக்கலாம்ல... மறுபடியும் வந்து தாலி கட்டி உயிர் வலிக்க வலிக்க வேதனை தர்றான் என அறைக்குள் வந்து கட்டிலில் வந்து படுத்தவளுக்கோ...என் வாழ்க்கை எப்படி இருக்குமோ?என்று அழுது கொண்டிருந்தாள். என்று தீருமோ இந்த பிரச்சினைகள் என சிந்தனை.

தனது பிளாட்டிற்கு வந்தவனுக்கோ மனதே சரியில்லை... அவளைப் பார்க்கப் பார்க்க கோபம் கூடுதலாக வரவும்... கொஞ்ச நாள் தள்ளி இருக்கட்டும் மனது சமாதானம் ஆன பிறகு கூப்பிடலாம் என்று யோசித்து தான் ஹரிதாவை அங்கு விட்டுவிட்டு வந்துவிட்டான்... ஆனாலும் அவள் அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்றதை மனம் கனக்கத்தான் செய்தது.அவளது நியாபகம் அதிகரிக்க என்ன செய்ய என்று யோசித்தவன்.

அஜயை அழைத்தான், அவன் வரவும் அவனது பைக்கிலயே ஏறி அமர்ந்தவன், அவனிடம் எதுவுமே சொல்லாமல் நேராக பாருக்கு வண்டியை விடச்சொன்னான். 

அஜய்க்கு ஆச்சரியமும் அதிர்ச்சியுடனும் வண்டியை நிறுத்தியவன்... “என்னடா சொல்ற” என்று திரும்பிக்கேட்க... “நீ போறியா இல்ல நான் டேக்ஸிப்பிடிச்சு போகவா” என்றதும்... 

“எனக்கு குடிக்கனும் போல இருக்கு என் கூட கம்பெனி குடு... வர்றியா? இல்லையா? நான் மட்டும் போகட்டுமா” என்று சிறிது அழுத்தமான குரலில் கேட்கவும்,அஜய் அவனுடன் உள்ளே சென்றனர்.

அங்கே அஜயிடம் “நீ என்ன குடிப்பியோ அதையே எனக்கும் ஆர்டர் பண்ணு” என்று சொன்னான். அஜய் ஷ்ரவனிடம் “என்னடா பிரச்சனை...கல்யயாணமான இரண்டவது நாளே பாருக்கு வந்திருக்க...என்கிட்ட சொல்லடா” என்றான். 

அவன் கேட்டதுதான் ஒரு வார்த்தைக்கூட அஜயிடம் சொல்லாமல், படபடவென்று குடிக்க ஆரம்பித்தான் குடித்து முடித்ததும்... 

ஷ்ரவனுக்கு போதை ரொம்ப ஆகிட்டது.ஷ்ரவன் எப்போதும் பீர் மட்டும்தான் சாப்பிட்டுப் பழக்கம், இப்போது ஆல்கஹால் சேர்ந்ததும் அவனால் முடியவில்லை... 

ஷ்ரவனை அவனது பிளாட்டிற்கு கொண்டுவந்து விட்டு, உள்ளே செல்லவும் அவனுக்கு முதல் முறை என்பதால் நன்றாக வாந்தி எடுத்தான், அவனால் முடியாமல் புலம்ப ஆரம்பித்தான்... “ரிது பேபி...ரிது பேபி” என்றவன் அப்படியே சோர்ந்துபோய் கட்டிலில் படுத்து விட்டான்.

அஜய் மெதுவாக தனது போனை எடுத்து ஹரிதாவிற்கு அழைத்து...எல்லா விஷயத்தையும் சொன்னவன் உன் பெயரைச் சொல்லித்தான் புலம்பிக்கிட்டிருக்கான் என்கவும்...

“ப்ரோ ப்ளீஸ் அங்கயே இருங்க...நான் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்” என்றவள்.

பயந்து கிருஷ்ணாவை அழைத்தவள், “என்னை அவருகிட்டக் கொண்டுவிடுங்கப்பா” என்று அழ,அவரு “என்ன விசயம்” என்று கேட்டும், ஷ்ரவனின் விசயம் சொன்னாளில்லை...ஸ்ரவனை மற்றவர்கள் முன்பு விட்டுக்கொடுக் முடியவில்லை... நள்ளிரவு நேரத்திலும் பிளாட்டிற்கு வந்து இருந்தனர்.

ஹரிதா வந்ததும் அஜய் மெதுவாக எல்லாவற்றையும் சொல்லி அவன் வீட்டுக்கு கிளம்பினான்.. அவன் தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். ஹரிதா ஹாலில் அமர்ந்திருந்த தந்தையிடம் வந்தவள்.. “நீங்க வீட்டுக்கு போங்க அப்பா நான் எல்லாம் பாத்துக்குறேன்” என்றதும், “அவருக்கு என்னம்மா பிரச்சனை?..” என்று கேட்டும்... “ஒன்னுமில்லைப்பா அவங்களுக்கு கொஞ்சம் ஃபீவர்ப்பா நான் கூடயிருந்து பார்த்துக்குறேன்... அவசரம் எதுனாலும் உங்களுக்கு போன் பண்றேன்பா” என்று அவரையும் அனுப்பிவிட்டாள்.

இருவரையும் அனுப்பி வைத்தவள்,ஷ்ரவனின் அருகில் வந்தாள் அவனது ட்ரஸைக் கழட்டி அவனுக்கு துடைத்துவிட்டவள்.அவனை எழுப்பி ட்ரஸ் மாற்றிவிட்டு படுக்கவைத்து அவளும் அப்படியே அவன் மீது படுத்துகொண்டாள். 

அவ்வளவு போதையிலும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டே “ரிது பேபி” என்று உளறியபடியே இருக்க, அப்படியே அவனது உதட்டை தனது இதழ்களால் மூடினாள்....

அத்தியாயம்-14

ஹரிதா நம்ம செய்த தப்பை நம்மதான் சரி பண்ணனும் என்று அவனுக்காக இறங்கி வந்தாள்.

முதல் தொடக்கம் அவளோடதாக இருந்தது....அவளது நெருக்கம், அவள் கொடுத்த முத்தம். ஷ்ரவனை மொத்தாமாகப் புரட்டியது...

ஹரிதா பேசிய வார்த்தைகள் ஏற்படுத்திய காயமும், நடந்த நிகழ்வுகளின் தாக்கமும் அவனுக்கு மனசஞ்சலத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது...அதற்குத்தான் அவன் குடித்ததே...

அடிநெஞ்சிலிருப்பவளை வெறுக்கவும் முடியாமல்,மறக்கவும் முடியாமல்...தத்தளித்தான்.

அவள் வேண்டும் என்று உடலும் உள்ளமும் கேட்க...வேண்டாம் என்று மூளை உரைக்க...தினமும் நொந்துக்கொள்கிறான் தன்னைத்தானே...

காயம் உண்டாக்கியவளே அதற்கு மருந்து...அதை அவன் உணரவில்லை.

ஹரிதா அவனது உதட்டை தனது வாய்க்குள் வைத்து சுவைக்க,இப்பொழுது ஷ்ரவனின் இருகிய கைக்களுக்குள் ஹரிதா இருந்தாள்.ஷ்ரவன் அவளது செயலைத் தனதாக்கிக்கொண்டு.அவளது வாயினுள் தனது நாவினால் கபடி ஆடிக்கொண்டிருந்தான்...மதுவின் நெடி அவனது வாய்க்குள், அதைப் பொருத்துக்கொண்டாள். அவளது இடுப்பை உடும்பு பிடியாகப்பிடித்திருந்தான்.

ஹப்பா...என்ன ஒரு இரும்புப்பிடி...அவளுக்கு வலித்தாலும், ஷ்ரவனுக்காகப் பொருத்துக்கொண்டாள்.

இப்போது ஷ்ரவன் முதலிலிருந்து தொடங்கினான். “ரிது பேபி” என்று அவளது கழுத்தில் முகம்புதைத்து அங்கே முத்தமிட... அவளது உடலோ கூச்சத்தில் சிணுங்க.

பாவையவள் அவனின் கைப்பாவையானாள்...உள்ளத்தின் ஏக்கமெல்லாம் உளறலாக...அவளது உடலில் முத்தங்களாக சிதறியவன்.

அவளது ஆடைகளை விலக்கி வைக்க முடியாமல், போதையிலும் தெளிவாக கழற்ற முயற்சிக்க, முடியாமல் போக கோபம் வந்தது.

“கழற்றுடி” என்று அவளைப் பிய்த்தெடுக்க...ஒன்றொன்றாக கழட்ட பொறுமையற்றவன் அப்படியே அவளை தள்ளி அவள்மேல் சரிந்து, அவளுக்கான அவனது தேடல் எவ்வளவு என்று காண்பித்தான்.

ஹரிதாவோ சிறிது துவண்டாலும் அவனைவிட்டு விலகினாலில்லை.

ஷ்ரவனோ சகியினை ஆண்டுக்கொண்டிருந்தான்.

முற்றும் துறந்தவர்களாக இருவரும்...எல்லாம் முடிந்து எப்பேதும் போல தன் நெஞ்சோடு அணைத்துப் படுத்துக்கொண்டான்...

விடிந்தும் தூங்கிக்கொண்டிருந்தவர்களை வெளியே காலிங்க் பெல்லின் சத்தம் எழுப்பியது.

முதலில் கண்விழித்த ஷ்ரவன், தன்மேல் பாரமாக உணர... தலைவலி வேறு சுற்றும் முற்றும் பார்த்தவன்.

ஹரிதா அவனது கையில் தலைவைத்து அவன் மேல் கால்களைப் போட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, ஒரு நிமிடம் யோசித்தவன்...என்ன நடந்தது என்று எல்லா நினைவுகளும் இப்போது தலைக்குள் இப்போது ஓட...தன் தலையில் அடித்துக்கொண்டவன், அவளது தூக்கம் கலையாதவாறு மெதுவாக தன் மேலிருந்து அவளை எடுத்து கீழே படுக்கவைத்தவன்.

வெளியேப்போய் கதவைத் திறக்க...சுமித்ரா நின்றிருந்தார்,கையில் பையுடன். 

“வாங்க எப்படி இருக்கீங்க என்று விசாரித்தவன், உட்காருங்க, ஹரிதாவைக் கூப்பிடுறேன்” என்று உள்ளே சென்றவன்.

அவளைத் தட்டி எழுப்ப... “ப்ளீஸ் த்தான்...உடம்பு வலிக்கு எழுப்பாதிங்க” என்க.

இப்போதுதான் நன்றாகப் பார்த்தான்... ஆடையில்லாது போர்வைக்குள் ஓளிந்திருந்தாள்.

ஷ்ரவனுக்கும் இப்போது அதே போர்வைக்குள் அவளுடன் படுத்துக்கொள்ள ஆசைவர...தன்னைக் கட்டுப்படுத்தியவன் அவளை இன்னும் தட்டி எழுப்பினான்...கண்விழித்துப் பார்த்தவள் கலங்கமற்று புன்னகைக்க,

அவனுமே இளகித்தான் போனான்.

ஒன்றும் பேசாமல்... “உங்கம்மா வந்திருக்காங்க” என்று கூறியவன்.குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டான்.

ஹரிதா சட்டென்று எழும்பி தனது ஆடையை உடுத்திக்கொண்டு முன்னறைக்கு வந்தவள் "ம்மா என்ன காலையிலயே இங்க” என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.

சுமித்ரா அவளை மேலும் கீழும் பார்த்தவர்.. “ஒன்றும் சொல்லாமல் தான் கொண்டு வந்த பையை அவளிடம் கொடுத்து...உனக்கு மாத்திக்க துணியும், சாப்பாடும் கொண்டு வந்திருக்கேன்...” அவளிடம் கொடுத்துவிட்டு.

“எழும்பி காபி கூடப் போடாலையா நீ...இவ்வளவு நேரம் தூங்குற.சில விசயங்கள் நம்மளும் விட்டுக்குடுக்கணும் எல்லாமே தானா நம்ம மடியில வந்து விழாது சரியா” எனக்கூறியவர். “நான் கிளம்புறேன்” என்று சென்றுவிட... என்ன சொல்ல வர்றாங்க என்று முழித்துக்கொண்டு நின்றாள்.

ஷ்ரவன் வெளியே வரவும், இவளும் குளித்துவிட்டு வந்தாள். ஷ்ரவன் அவளைத்தான் பார்த்திருந்தான்.

அவள் அவனோடு வாழ ஆரம்பித்துவிட்டாள்,மனதோடு மட்டுமல்ல...நிஜத்திலும்.

குளித்துவிட்டு தலையில் துண்டோடு அக்மார்க் மனைவியாக அம்மா சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க, எடுத்து வைக்கவா என்று பேசிக்கொண்டே தட்டை தேடி எடுத்துக்கொண்டு வரவும்.

ஷ்ரவன் ஒன்றுமே பேசாமல் தனது உணர்வுகளை எல்லாம் விழுங்கிக்கொண்டே அவளைத்தான் பார்த்திருந்தான்.

அவனது அருகில் வந்து தட்டை வைத்து பரிமாற...அசையாமல் இருக்க, என்னவென்று ஹரிதா ஏறிட்டுப்பார்த்து...விழிகளினால் என்ன என்றுக்கேட்டாள்.

“ஒரு நாள் உன்கூட படுத்திட்டா... நீ பேசினது, செய்தது, எல்லாம் மறந்திரும்னு நினைச்சியா” என்று எந்தவித சலனமும் முகத்தில் இல்லாது, கோபம் இல்லாது அழுத்தமாக வார்த்தைகளை பிரயோகித்தான்.

சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்... “உடம்பு மட்டும்தான் எனக்கு தேவையா இருந்துச்சுனா எப்பவோ நான் மியாவக் கல்யாணாம் பண்ணிருப்பேன். உனக்குத் தெரியுமா... அவ அரைகுறையா என் முன்னாடி நின்னப்போம் கூட அசிங்கமா அருவருப்பாதான் இருந்தது.

ஆனால் முதன் முதலா உன்கிட்டதானடி என்னை மறந்தேன்,நேத்து வரைக்கும் அதுதான் நடந்துச்சு.”

கொஞ்சம் தன்னை நிதானப்படுத்தியவன்...

“நீ கொஞ்ச நாள் உங்கப்பா வீட்ல இரு...எனக்கு மனசு சமாதானமாகும் போது அழைச்சிக்குறேன்...இல்லைனா பிரிஞ்சிருவோம் அதுதான் நம்ம இரண்டுபேருக்கும் நல்லது.

மனசு இரண்டையும் வெகு தூரத்துல வச்சுட்டு உடம்பு மட்டும் சேர்ந்தால் அந்த வாழ்க்கை நிலைக்காது...கடைசி வரைக்கும் இப்படியே புரிதல் இல்லாம வாழவும் முடியாது.எனக்கு இப்பவே பைத்தியம் பிடிக்குது...” என்று தன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

ஹரிதா அவனிடம் பேச வர “தயவு செய்து மன்னிப்பு அது இதுனு எதுவும் சொல்லாத...

உன்னை நான் தண்டிக்கவே விரும்பல, அப்படி செய்தா அது எனக்கு நானே தண்டனைக் கொடுத்துக்கறமாதிரி...அப்படி இருந்தாதான் மன்னிக்க முடியும்.

எனக்கு என்மேலதான் கோபம்...என் காதலை உன்கிட்ட அழுத்தமா உணர்த்தாமால் உன்கூட வாழ்ந்ததுதான் என்னோட தப்பு...அதுதான் நீ என்னை நம்பாமப் போயிட்டா.

நான் இதுல இருந்து வெளியே வருவேனா தெரியாது.ஆனால் இந்த ஜென்மத்துல சத்தியாமா நீ மட்டுந்தான் என் மனைவி...உன்கூட வாழ்ந்தாலும் சரி...உன்னைவிட்டு பிரிந்துப்போனாலும் சரி. வேறொருத்தி என் மனசுக்குள்ளவும் வரமுடியாது, என் உடம்பும் வேற எவக்கூடவும் ஒட்டாது.

நீ வேணும்னா வேற கல்யாணம் பண்ணிக்கோ...என்னை மாதிரி ஒரு பொம்பளைப் பொறுக்கி இல்லாம...ஒரு நல்லவனாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ...”என்று பேசிமுடித்தவன். எழும்பி நின்றான்.

ஹரிதா அழுதுக்கொண்டே அவனருகில் சென்று, அப்படியே அவனைக் கட்டிக்கொண்டாள். 

அவசரத்துல பேசிட்டேன். “நான் உங்க ரிது பேபி தான...நான் உங்கூடவே இருக்கேன்...நீங்க இல்லனா நான் செத்துப்போயிடுவேன்...” என்றதும்.

அவளை தன்னிலிருந்து பிரித்தெடுத்தவன்

"செத்துப்போயிடு...இப்படி நான் பைத்தியக்காரனா வாழ்றதுக்கு பதிலா...நீ இல்லைனு நினைச்சாவது வாழ்ந்திடுறேன்" என்று தள்ளிவிட்டவன்... அப்படியே கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான்.

அவன் தள்ளி விட்டதில் கீழே விழுந்த ஹரிதா, அப்படியே சிறிது நேரம் அங்கேயே அப்படியே தரையில் படுத்து இருந்தாள் எவ்வளவு நேரம் என்று தெரியாது.

அவளது போனில் அழைப்பு வரவும், உணர்வு வந்தவள் எடுத்துப் பார்த்தாள், அவளது தோழி காவ்யா அழைத்தாள்.

போனை எடுத்துப் பேசத் தொடங்கியதுமே அழுகையை அடக்க முடியாமல் போனிலேயே விக்கி விக்கி அழ, காவ்யாவோ பயந்து, “என்னடி ஏன் அழுற?..” என்று கேட்க பதில் சொல்லாமல், “வீட்டுக்கு கொஞ்சம் வந்திட்டுப்போறியா” என்று கேட்டவள். ஷ்ரவனுடைய வீட்டு அட்ரஸ் அவளுக்கு சொன்னாள்.

அரை மணி நேரத்தில் காவ்யா வந்தவள் ஹரிதாவை பார்த்து “ஏன் அழுத? என்ன பிரச்சினை? போனில் ஏன் அழுத” என்று அவளது கன்னங்களைப்பிடித்து கேட்க.

காவ்யாவிடம் எல்லா விஷயத்தையும் கூறி அவள் மடியில் படுத்து அழுதாள். காவ்யவிற்குமே இப்போதுதான் தெரியும்...இவ்வளவு பிரச்சனை நடந்து இருக்கா என்று அதிர்ச்சியில் அமர்ந்திருந்தவள். ஹரிதாவின் முதுகை வருடி கொடுத்தாள்....

சிறிது நேரம் இருந்தவள் ஹரிதவிடம் "ஏதாவது சாப்பிட்டியா"என்று கேட்க. அவள் இல்லை என்று தலையாட்டினாள்...சுமித்ரா கொண்டுவந்த சாப்பாடு அப்படியே இருக்கவும், அந்த சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டாள் காவ்யா...

காவ்யா ஹரிதாவிடம் கேட்டாள் “இப்போ என்ன செய்வதாக பிளான் பண்ணி இருக்க” என்று காவ்யா கேட்டாள்.

“தெரியலை ஆனா ஸ்ரவனை விட்டு நான் எங்கயும் போறதா யோசிக்கவே இல்ல. நான் இங்கே இருக்கேன் என்ன நடந்தாலும் பரவாயில்லை... இப்போ அம்மா வீட்டுக்கு என்ன கொண்டு விடுறியா” என்று காவ்யாவிடம் கேட்க, இப்போது இருவரும் கிளம்பி ஹரிதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றனர்.

அங்கே சென்றவள். ஒன்றும் நடவாதது போல காண்பித்துக் கொண்டாள். இருவரும் நன்றாக வாழ்வது போலவே முகத்தை புன்னகையோடு வைத்துக் கொண்டாள்.

பெற்றவளுக்குத் தெரியாதா. சுமித்ரா பிள்ளையின் முகத்தைப் பார்த்தே தெரிந்துக்கொண்டார் என்ன நடந்திருக்கும் என்று.

ஆபீஸுக்கு சென்ற ஷ்ரவனுக்கு வேலையே ஓடவில்லை ஹரிதாவை பேசிவிட்டு வந்துவிட்டான்தான். ஆனாலும் அவனுக்கு மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அவள்தான் அப்படி பேசினாள் என்றால், நம்மளும் அப்படி மனசு கஷ்டப்படுத்துற மாதிரி பேசி விட்டோமே என்று வருந்தினான்.

என்ன செய்ய என்று சிறிது நேரம் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்தவன். ஒரு யோசனை தோன்ற அஜயை அழைத்தவன் “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு, ஹரிதாவிற்கு ஒரு போன் பண்ணி எங்க இருக்கானு கேளு” என்று கேட்டான் அஜய்க்கு ஒன்று புரியவில்லை என்றாலும் தன் நண்பனுக்காக ஹரிதாவிற்கு அழைத்தான்...

அவளது போன் காவ்யாவின் கையில் இருந்தது... அழைப்பை ஏற்றவள் அந்த பக்கமிருந்து அஜய் பேசுகிறார் என்றதும் காவ்யா அமைதியாக இருந்தாள். 

அஜயோ அழைப்பை துண்டித்தவன், மறுபடியும் அழைக்க எடுத்துப் பேசியவள் “நான் காவ்யா பேசுறேன் ஹரிதா போன் என்கிட்ட இருக்கு அவ தூங்கிட்டா... அவ கிட்ட எதுவும் சொல்லனுமா” என்று கேட்க, “இல்லை எங்க இருக்கானு கேக்கதான் போன் பண்ணேன்” என்றதும்.

காவியா கண்டு கொண்டாள் அவன் எங்க இருந்து பேசுகிறேன் என்று, “ஷ்ரவன் அண்ணா போன் பண்ணி கேட்க சொன்னாங்களா” என்று நேரடியாகவே அஜயிடம் கேட்டுவிட்டாள். அஜயோ இதற்கு எப்படி பதில் சொல்ல என்று அமைதியாக இருந்தான்.

“ஷ்ரவன் அண்ணாகிட்ட சொல்லிருங்க ஹரிதா அவங்க அம்மா வீட்லதான் இருக்கா, இப்படியே போனா சீக்கிரம் பைத்தியமாகிடுவா” என்று வேதனையில் பேசியவள், போனை வைத்து விட்டாள். 

ஹரிதாவின் போனிலிருந்து அஜய் மற்றும் ஷ்ரவனின் நம்பரை எடுத்து தனது மொபைலில் பதிந்து கொண்டாள் காவ்யா.

காவ்யா மெதுவாக சுமித்ராவிடம் சென்று “அவகிட்ட எதுவுமே கேட்காதீங்க...

அவள் தானாக சரியாயிடுவா. நம்ம இந்த பிரச்சினையில் தலையிட முடியாது அவங்க இரண்டுபேருமே பேசி சரியாகிடுவாங்க” என்று அவருக்கு ஆறுதல் சொன்னவள்.  

“நம்ம இடைப்பட்டா அவங்க பிரச்சனை பெருசாக வாய்ப்பிருக்கு... அதனால கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்றவள். நான் கிளம்புகிறேன்” என்று கிளம்பி விட்டாள்.

சுமித்ரா தூங்கிக்கொண்டிருந்த ஹரிதாவிடம் வந்தவர்... அவளது தலையை தடவி கொடுத்துக்கொண்டே, மகளுடைய வாழ்க்கை எப்படியிருக்க வேண்டியது, அவளே அதைக் கெடுத்து வச்சிருக்காளே என்று வேதனையில் அப்படியே அமர்ந்திருந்தார்.

மாலையில் தனக்கான சில பொருள்களை எடுத்து வைத்த ஹரிதா, அம்மாவிடம் வந்தவள்... “நான் என் வீட்டுக்குப் போறேன்மா” என்றவள், தனது வண்டியில் பிளாட்டிற்கு வந்து சேர்ந்தாள்...

திருமணத்திற்கு முன்பே எல்லாப் பொருட்களும் வாங்கி வைத்திருந்தனர்.இங்குதான் வாழப்போறோம் என்று... 

எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி வைத்தவள்,அவளுக்குத் தெரிந்த வகையில் சமைத்து வைத்துவிட்டு காத்திருந்தாள்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஷ்ரவன், ஹரிதா அங்கே இருப்பதை கண்டு அவனுக்குமே சிறிது நிம்மதியாக உணர்ந்தான், அதை காண்பித்துக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டான்...இனி பேசினால் பிரச்சினைகள் வேறு விதமாக செல்லும் என்று அவனுக்கும் தெரியும்.

ஷ்ரவன் வந்ததும் காபி கொண்டுவந்து கொடுத்தாள், அதை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் தனது லேப்டாப்பில் தலையைக் கொடுத்துக்கொண்டான்...

நின்று பார்த்தவள் அங்கயே வைத்துவிட்டு சென்றாள்...சிறிது நேரம் கழித்து வந்துப்பார்க்க, ஷ்ரவனோ அதைத்தொட்டுக்கூடப் பார்க்கவில்லை...

சமைத்த சாப்பாடும் அப்படியே இருக்க, அவன் வெளியே ஆர்டர் செய்து சாப்பாடு வந்ததும் வாங்கி சாப்பிட அமர்ந்தான்...

பாதி சாப்பாட்டில் , ஹரிதா அவனதருகில் வந்து கணவன் சாப்பாட்டில் கையிட்டு எடுத்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள்...

ஒரு நிமிடம் பார்த்தவன், அவள் சாப்பிட்டிக்கொண்டிருக்க, எழுந்து சென்றுவிட்டான்.

இங்கு காவ்யாவோ அஜயின் நம்பருக்கு அழைத்தாள். புது நம்பராக இருக்க யோசித்து எடுத்தவன்... யாரென்று கேட்க, “நான் காவ்யா பேசறேன்” என்றதும்...சிறிது யோசித்தவன் சொல்லுங்க என்றதும் "ஹரிதா ரொம்ப பாவம், ஷ்ரவன் அண்ணகிட்ட கொஞ்சம் பேசுங்க,ப்ளீஸ் அவளைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு... கொஞ்சம் சமாதானப் படுத்துங்க,”என்று பேசியிருந்தாள்.

அஜயும் “சரிங்க அவனிடம் பேசி பாக்குறேன் நீங்க ஹரிதாவை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்க...ஏன்னா ஷ்ரவன் ஹரிதாவை ரொம்ப லவ் பண்றாங்க...அதனாலதான் பிரச்சனை. எல்லா பிரச்சினைகளையும் முடிவுக்கு வரும் வருத்தபடாதனு சொல்லுங்க” என்று சொல்லியிருந்தான்.

அங்கோ இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் முடிந்த அளவு ஷ்ரவன் ஹரிதாவுடன் பேசாமல் ஒதுங்கியே இருக்க ஆரம்பித்தான்.

தனித்தனி அறைகளில் இருந்தார்கள். ஹரிதாவின் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும். எல்லவற்றையும் சகித்துதான் ஆகவேண்டும் என் அமைதியாகவே இருந்தாள்...ஹரிதாவின் பேச்சு முற்றிலும் நின்றுவிட்டது.

ஹரிதா சமைத்து வைத்தாலும் அதை அவன் தொட்டு கூட பார்ப்பதில்லை.வெளியேவே சாப்பிட்டு வந்துவிடுவான்... 

இப்படியாக ஒரு பத்து பதினைந்து நாள் சென்றிருக்கும் தனதறையிலிருந்து, முன்னறைக்கு வந்தவள், ஷ்ரவன் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகே வரும் பொழுது அப்படியே மயங்கியவள்... அவன் மேலேயே சரிந்து விழுந்தாள்

ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து நின்றவன், அவளை எழுப்பி பார்க்க, அவளோ மயக்கத்தில்... உடனே கிருஷ்ணாவிற்கு அழைத்து அங்கு ஹரிதா மயங்கி விழுந்ததை சொன்னவன்.

அவளைத் தூக்கிக்கொண்டு தனது காரில் படுக்கவைத்தவன்...அவர்களது மருத்துவமனைக்கே கொண்டு சென்றான்...

அங்கே எமெர்ஜென்ஸியில் சேர்த்துவிட்டு வெளியே அமர்ந்திருந்தான்.அதற்குள் கிருஷ்ணாவும் சுமித்ராவும் பதறிக்கொண்டு ஓடிவந்திருந்தனர்...

அது அவர்களது மருத்துவமனை என்பதால்...கிருஷ்ணாவோ உள்ளே சென்று பரிசோதனை செய்துக்கொண்டிருந்த மருத்துவரிடம் பேசியவர்...அப்படியே உடைந்துப்போய் வெளியே வந்து, ஷ்ரவனின் அருகில் வந்து அமர்ந்தார்.

ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருக்கவும்... “என்னாச்சு மாமா” என்று அவன் முதன்முறையாக அழைக்க...

திரும்பி பார்த்தவர் “நீங்க செய்த தப்ப சரிசெய்யதான் என் பொண்ணை கல்யாணம் செய்திக்கிட்டீங்களா.

அப்படியாவது என் பொண்ணுமேல அன்பா இருந்திருக்கீங்க அதுவரைக்கும் சந்தோசம்.” 

ஷ்ரவனுக்கு ஒன்றும் புரியாமல் விழித்தவன், சிறிது நேரத்தில் புரிந்தவனுக்கு சந்தோசப்படுறதா இல்லை இப்படியா என்று வருத்தப்படுறதானு தெரியாமல் கண்களை உருட்டிக்கொண்டிருந்தான்...அதுவும் கல்யாணம் முடிந்து பதினைந்து நாட்களில்.

அத்தியாயம்-15

ஹரிதாவின் பரிசோதனை ரிப்போர்ட்டுகள் வந்தது அதை கொண்டு வந்து கிருஷ்ணாவிடம் கொடுக்கவும். 

கிருஷ்ணா ஷ்ரவனை கையைக் காண்பித்து “அவங்ககிட்ட கொடுங்க.

இது அவங்களோட மனைவியோட ரிப்போர்ட்தான்” என்று கூறினார்.

ரிப்போன்ட்டை வாங்கியவனுக்கு எப்படி உணர்ந்தான் என்றே சொல்லமுடியவில்லை.

அதை வாசித்தவனுக்கு அவனது மனைவி கர்ப்பம் என்றும், அவனது பிள்ளைக்கு ஆறு வாரங்கள் ஆகிற்று என்றும் இருந்தது... அதை ஒரு பத்து முறையாவது வாசித்திருப்பான்.

கிருஷ்ணாவிற்கு கோபம் இரண்டு பேரையும் நம்பினதுக்கு இப்படி பண்ணிட்டு வந்து நிற்கும்போது ஒரு தகப்பனா அவருக்கும் வருத்தம்... உண்மையிலேயே கல்யாணம் நின்றுப் போயிருந்ததுன்னா...என் மகளின் நிலை என்ன. தன் மகளுக்காக இப்பொழுது யோசிக்க ஆரம்பித்தார்

இந்த விஷயத்தை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். அப்படியே சுமித்ராவிடம் லேசாக விஷயத்தை சொல்ல.

அவருக்கும் இது அதிர்ச்சியான விஷயம்தான்... இது எப்படிங்க நம்ம பொண்ணு இப்படி ஒரு காரியம் செய்தாள்? சொந்தக்காரங்க முன்னாடி என்ன சொல்ல முடியும் எல்லாரும் கேட்பாங்களே, கல்யாணம் முடிஞ்சு பதினைந்து நாள்தான் ஆகுது..அப்படியே தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்...

பரிசோதனை எல்லாம் முடிந்து ஹரிதாவை அங்கு ஒரு தனி அறையில் படுக்க வைத்திருந்தனர்... ரொம்ப வீக்காக இருக்கிறாள் என்று அவளுக்கு டிரிப்ஸ் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது.

மூன்று பேரும் உள்ளே வந்து பார்க்கும் பொழுது ஹரிதா விழித்திருந்தால், ஷ்ரவன் அவளதருகில் சென்று நின்றான்...இருவரின் பார்வையும் பின்னிப்பினையவும்.. அவளைப் பார்த்துக் கொண்டேதான் நின்றிருந்தான். என்ன சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை அப்படியே நின்றிருக்க.

கிருஷ்ணா ஒரு முடிவோடுதான் அங்கு அமர்ந்தார்...இவர்களது பிரச்சனை இன்றோடு முடியவேண்டும் என்று. 

அவளது கையைப் பிடித்தவாறு... ஷ்ரவனிடம் “என்ன செய்யலாம்னு இருக்கீங்க” என்று மெதுவாக கேட்க... அவனுக்கு புரிந்தது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று.

“ என்ன செய்யலாம்னு கேள்வி எதுக்கு மாமா.... அது எங்க குழந்தை. நீங்க இப்படி கேட்கறீங்கனா நீங்க எதுவும் முடிவு பண்ணிருங்கீங்களா, இதுக்கு உங்க மகளுக்கும் சம்மதமா,” என்றவன் கோபத்தில் அப்படியே எழுந்து.

“இந்த பொம்பள பொறுக்கியோட பிள்ளை அவளுக்கு வேண்டாம்னா பேசாம அழித்து விடுங்கள்...அதுதான உங்களுக்கு வேணும் ” என்று கோபத்தில் சொன்னவன். அப்படியே “உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி குடுத்துடுங்க” என்று சத்தம்போட்டடு சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டான்.

மூன்று பேருக்குமே அவனது பதில் அதிர்ச்சியைத் தந்தது... கிருஷ்ணா கேட்க வந்த விஷயம் வேறு ஒன்று, ஷ்ரவன் புரிந்து கொண்ட விஷயம் வேறு ஆக மொத்தம் எல்லாம் பிரச்சினையில் வந்து நின்றது.

வீட்டுக்கு வந்தவுடன் கிருஷ்ணா கேட்டதும் அவர் பேசியதுமே மனதில் உளன்றுக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாத ஷ்ரவன் தற்போது,தனது அம்மாவிற்கு அழைத்தான்.

அவனது அழைப்பை ஏற்று அவர் “சொல்லு என்ன பிரச்சினைய உண்டாகி வச்சிருக்கீங்க ரெண்டு பேரும்” என்று கேட்டார். அவனுக்கு இந்த தகவலை எப்படி நிருபமாவிடம் செல்வது என்று சிறு தயக்கம், திரும்பவும் கேட்டார் “என்ன விஷயம் சொல்லு” என்று, “லேசாக ஹரிதா மயங்கி விழுந்துவிட்டாள் என்றும், அவள் ஆஸ்பத்திரியில் இருக்கிறாள்” என்று சொல்லவும் அவர் சிறிது பதறி “என்ன ஆச்சு?..” என்று கேட்டார்.

சிறிது தயங்கியவன், “அதுவந்து.. அதுவந்து மா...” என்று வார்த்தைகளை இழுக்க, நிருபாமா புரிந்துகொண்டார். 

“ எந்த ஹாஸ்பிட்டல்ல? எப்படி இருக்கா? வேற எதுவும் பிரச்சனை இல்லையே?..” எனக் கேள்விகள் கேட்க..

அதற்கு ஷ்ரவன் “அவங்க ஆஸ்பத்திரியில்தான்மா அவ இப்போ இருக்கா.மாமாவுக்கு கொஞ்சம் விருப்பம் இல்லை போல

இருக்கு” என்று சொல்லவும்...நிருபாமா " ஓ.. ரிப்போர்ட்ஸு வாங்கி பார்த்தியா" என்று கேட்க . ஷ்ரவனும் “ஆமாம்” என்று சொன்னான், “என்கிட்ட தான் இருக்குமா.” 

“சரி நான் பேசிக்குறேன் என்றவர்” போனை வைத்துவிட்டார்...

உடனே நிருபமா கிருஷ்ணாவிற்கு அழைத்து பேசினார். என்ன பேசினார் என்று தெரியாது அப்படியே கிருஷ்ணா அடங்கிவிட்டார்.

இனி அம்மா பார்த்துக் கொள்ளுவார் என்று லேசாக ஆசுவாசம் வந்ததும் படுத்து தூங்கிவிட்டான் நல்ல தூக்கத்தில் அவனது போனில் அழைப்பு வந்து கொண்டே இருக்க யார் என்று எடுத்துப் பார்த்தால் அது கிருஷ்ணாவிடம் இருந்து வந்திருந்தது.

கிட்டத்தட்ட 10 அழைப்புகளுக்கு மேல் வரிசையாக இருக்கவும்... மாமா அழைச்சதேயில்லையே என்று.. ஏதோ என்று பதறியடித்து திரும்பவும் அவருக்கு அழைக்க அவர் கேட்ட கேள்வியிலயே ஆடிவிட்டான்..

"ஹரிதா அங்க வந்தாளா கேட்டார்".

“இங்க வரலையே.. என்ன ஆச்சு?அவ உங்ககூட தானே ஆஸ்பத்திரில இருந்தா, இப்போ என்கிட்ட கேக்குறீங்க” என்று அவரிடம் கேட்க, கிருஷ்ணாவும் “அம்முவ ஒரு ரெண்டு மணி நேரமா காணவில்லை. 

ஆஸ்பத்திரில தான் இருப்பானு தேடியாச்சு, வீட்டுக்கு போன் பண்ணா அங்கயும் போகலை.

காவ்யா கிட்டயும் போகல, அதான் உங்ககிட்ட வந்திருக்காளானு கேட்டேன்,” என்று அவர் அழாத குறையாக பேசினார். 

“எப்போது இருந்து காணம்...” என்று அவரிட்ம பேசியபடி உடைமாற்றி கீழே வந்திருந்தான்... “இப்ப நீங்க எங்க இருக்கீங்க” என்று கேட்டான். 

“அவரும் நாங்க ஆஸ்பத்திரியில தான் இருக்கோம்” என்று சொல்லவும்... “ இருங்க நான் வரேன்” என சொன்னவன்...அவ்வளவு வேகமாக காரை ஓட்டியவன் மருத்தவமனையில்தான் வந்து நிறுத்தினான்.

மருத்துவமனைக்கு சென்றவன் பார்த்தது கிருஷ்ணாவும் சுமித்ராவும் முகம் வாடி என்ன செய்ய என்று தெரியாமல் அவரது அறையில் அமர்ந்து இருந்தார்கள்...

“வீட்ல நல்லா தேடிப்பார்த்தீங்களா” என ஷ்ரவன் கேட்க...

“ சுமித்ரா நான் அங்க இருந்துதான் வர்றேன்...நம்ம ஹ்ஸ்பிட்டல்தானனு நா தைரியமா உள்ளேயே விட்டுட்டு போனேன். 

வீட்டுக்கு நைட் சாப்பாடு எடுத்துட்டு வர அதுக்காக எல்லாம் ரெடி பண்ணிட்டு இருந்தேன். அவளை காணலைனு எனக்கு போன் பண்றாங்க.வீட்டுக்குள்ளயும் எல்லா இடமும் தேடி பார்த்தாச்சு காணவில்லை” என்று அழ தொடங்கிவிட்டார்.

“ ஹாஸ்பிட்டல்ல சிசிடிவி கேமரா வசதி இருக்குதான, பார்த்தீங்களா” என்று அவன் கேட்க... “அதுயெல்லாம் பார்த்தாச்சு.அவளாகத்தான் வெளிய போய் இருக்கா. ”

“காவ்யாவுக்கு இன்னொரு முறை அழைத்து கேளுங்கள்” என்று சொல்லவும்... காவ்யவை அழைத்துக் கேட்க... “ இங்கு வரவில்லை இதுவரைக்கும்... இனி வந்தா உங்களுக்கு தகவல் சொல்றேன்” என்று சொன்னாள்.

உடனே அஜயை அழைத்தவன் “அஜய் கொஞ்சம் மாமாவோட ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரடியுமா” என்று கேட்டான்.

அவன் பதறி அழைத்ததை வைத்தே எதோ பிரச்சனை என்று “இன்னும் பதினைந்து நிமிஷத்திலே அங்க வந்திடுவேன் என்னடா பிரச்சனை” என்று அஜய் கேட்கவும் “ஹரிதாவக் காணோம்” என்று சொல்லும்போதே குரல் கமறியது.

“ எங்கேயும் போயிருக்க மாட்டா.... நீ பயப்படாத நான் சீக்கிரம் வரேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டான் அஜய்.

சுமித்ரா “என் பொண்ணுக்கு கல்யாணமுடியாம இருந்திருந்தாக்கூட நல்லாயிருந்திருப்பா போல..கல்யாணமுடிந்திலிருந்தே அவளுக்கு நேரமே சரியில்லை.. எங்களோடவே இருந்திருப்பா” என்று அழ ஆரம்பித்தார்.

கிருஷ்ணா ஷ்ரவனைக் குற்றம் சுமத்தவில்லை.. ஆனால் அவர் பார்வை அவனை ஆயிரம் கடும் சொற்களால் பேசியது போல் இருந்தது.

கிருஷ்ணா ஷ்ரவனைப் பார்த்து "ஹரிதாவாவது எவளோ ஒருத்தி சொன்ன பொய்யை நம்பி வார்த்தைகளை விட்டாள் ...ஆனா நீங்க இன்னைக்கு பேசுனது உங்க சொந்த வார்த்தைகள் தானே? உங்க மனதில் இருந்து வந்த வார்த்தைகள் தானே?அதை எப்படி அவளால் தாங்க முடியல... நீங்க பேசினதுதான் அவளுக்கு வேதனையாக இருந்திருக்கும்.

அவ கல்யாணத்தை நிறுத்துவதற்காக எவ்வளவோ யோசித்திருப்பாள்.. உங்க மேல எவ்வளவு அன்பு வைத்திருப்பாள் அதை எல்லாம் மீறி அந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சித்திருக்கானா...அவளோட மனசு என்ன பாடுபட்டிருக்கும்.

அவளுக்காகவா யோசித்தா,ஒரு பொண்ணுக்காக இரக்கம் பண்ணினா,அது அவ வாழ்க்கையே இப்போ அலங்கோலமாக்கிட்டு” என கிருஷ்ணா ஷ்ரவனை குற்றம் சுமத்தினார்.

“ அவளுக்கு வெளியே வேறு யாரையுமே தெரியாது. எங்க போனாளோ? எப்படி இருக்காளோ? கிட்டத்தட்ட நாலு மணி நேரத்துக்கு மேல ஆகிட்டு வெளியே இறங்கி.. இதுல வேற கர்ப்பமா வேற இருக்கா... எங்கயாழது விழுந்தாக் கூட தெரியாது” என சுமித்ரா ஒரு கரையில் புலம்ப ஆரம்பித்திருந்தார்.

ஷ்ரனுக்குமே இப்பொழுது ஹரிதாவை நினைத்து பயம் வந்தது..எங்கே இருக்காளோ? நல்லபடியா இருக்கணுமே... கடவுளே என் ரிது பேபிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டான்.

தனது இரு கையாலும் தலையை பிடித்துக்கொண்டு... எங்கு போய் தேடுவது என்று அப்படியே அமர்ந்திருந்தவன். அஜய் வந்ததும் “நான் ஒருபக்கம்போய் தேடுறேன் நீ உன்னோட பைக்லபோய் தேடு..” என்று சொல்லிட்டு வெளியே கிளம்பும்போது.

அஜய் கேட்டான் “கையில போன் வச்சிருக்காளா” என.

அப்பொழுதுதான் எல்லாருக்கும் யோசனை வந்தது.. அவன் “அவளைத் தூக்கிக் கொண்டு வரும் அவசரத்தில் அவளது போனை எடுத்து வரவில்லை... அதனால் அதற்கும் இப்போது இடமில்லாமல் போனதே” என்று சொல்லவும்.

சுமித்ரா சொன்னார் “என்னோட போன் அவளோட கையில் தான் இருக்கு... நான் கொடுத்துட்டுதான் போனேன்” என்றதும்...

எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதியாகியது. 

உடனே அந்த நம்பருக்கு அடித்து பார்க்க அது சுவிட்ச் ஆப் வரவும் ஷ்ரவன் உண்மையிலேயே நொந்து போனான்...

கிருஷ்ணா இப்பொழுது எழுந்தவர் "நம்ம போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவோம் எனக்கு தெரிந்தவங்க இருக்காங்க வெளியே தெரியாமல் கண்டுபிடிச்சு கொடுத்துவாங்க...” எனக் கிளம்பினார்.

சுமித்ராதான் “வேண்டாம் கொஞ்சம் வெயிட் பண்ணவோம்... போலிஸ்க்கு போகவேண்டாம்” என்று பயந்தார்...

அஜய் கேட்டான்... “உங்களுக்கு எப்படித் தெரியும் அங்கிள்” என்று கேட்க...அவர்தான் “ஒரு எமெர்ஜென்ஸி கேஸ் முடிச்சிட்டு வந்து அம்முவ பார்க்கலாம்னு போனேன் காணவில்லை... ட்ரிப்ஸ் ஊசி எல்லாம் கழட்டி வச்சிட்டுப்போயிருக்கா...”என்றார்.

“தேடுவோம்...இன்னும் கொஞ்சநேரம் கிடைக்கலைனா...போலிஸ் ஸ்டேசன் போவோம்...என்று சொல்லும்போதே” ஷ்ரவன் குரலில் வேதனை...ஹரிதா எப்டியாவது கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனை...

“நாங்க தேடப்போறோம்” என்று கிளம்பவும்

மருத்துவமனைக்கு போன் வந்தது,ரெயில்வே ஸ்டேசனில் டாக்டர் பொண்ணு மாதிரியே ஒரு பொண்ணு இருக்கு என்று அவர்கள் கிருஷ்ணாவுக்கு கணெக்ட் செய்ய.

டாக்டர் உங்க பொண்ணு மாதிரியே ஒரு பொண்ணு இங்க வெயிட்டிங்க் ரூம்ல படுத்திருக்கு என்று சொல்லவும் தான்...

ஷ்ரவன் எப்படி வண்டியெடுத்தான், எப்படி அங்கு சென்று சேர்ந்தான் என்று தெரியாது...ஓடி ஓடித் தேடினான் எந்த இடமென்று தெரியாது கடைசியாக இருந்த காத்திருப்பு இடத்தில் அநாதைப்போலப் படுத்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும்தான் உயிரே வந்தது..

அப்படியே அவளருகில் செல்ல அரை மயக்கத்திலிருந்தாள்...பக்கத்தில் ஒரு வாலிபப்பெண்ணும், ஒரு அம்மாவும் இருந்தனர்... பார்த்தவுடனே தெரியும் மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள் என்று.

அந்தப்பெண்ணின் கையில் பழைய பேசிக் மாடல் போன் இருந்தது.

ஷ்ரவன் மெதுவாக ஹரிதாவை தூக்கி வைத்து.. “ரிது பேபி...ரிது பேபி” என்று கன்னத்தை தட்டியவன்... அவளது முகமெங்கும் முத்தம் வைக்க கண்களில் கண்ணீர் தன்னையறியாமலயே வந்தது ஷ்ரவனுக்கு... அவளோ அரை மயக்கத்தில் அப்படியே அவனது தோளில் சாய்ந்தாள்.

அஜய் கேட்டான், “இவங்களை எப்படித்தெரியும்?..” என்று.

அந்தம்மா "நான் இந்தப்பொண்ணுக் கல்யாணத்துக்கு அவங்க வீட்ல வேலைக்கு போயிருந்தேன்.என் பிள்ளைக்கு அவங்க ஹாஸ்பிட்டல்ல மருத்துவம் பார்த்தாங்க,எங்ககிட்ட டாக்டரய்யா பணமும் வாங்கலை. ஹாஸ்பிட்டல் நம்பருதாய்யா தெரியும், அதுதான் அங்க போன் பண்ணினோம்...நாங்க கொஞ்சநேரம் முன்னாடிதான் வந்தோம்...பார்த்ததும் போன் பண்ணிட்டு காத்திருக்கோம்” என்றார்.

அஜய் கேட்டான் “எங்களைத் யாருனுத் தெரியுமா?..”

“ உங்களைத் தெரியாதுய்யா.

அவங்களைத்தெரியும்” என ஷ்ரவனைக் கைகாட்டியவர், “சின்னபாப்பா வீட்டுக்காரங்கதான..” என்றதும்.

ஷ்ரவன் அஜயிடம் கண்காண்பித்தான்...

அவர்களோட அட்ரஸ், போன் நம்பர் வாங்கியவன், “ரொம்ப நன்றிங்க” என்று சொன்னான்.

ஷ்ரவன் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை.ஹரிதாவைத் தூக்கியவன்.தனது காருக்கு நடந்தான்.அதற்குள் கிருஷ்ணாவும் காரில் வர.அஜய்தான் ஷ்ரவனின் காரை ஓட்டினான்... தனது மடியில் படுக்கவைத்திருந்தவன், அவளது முடியை ஒதுக்கி, கையைபிடித்து விரலோடு விரல் கோர்த்து வைத்திருந்தான்,முன்பக்கம் கிருஷ்ணா அமர்ந்து இவர்கள் இருவரையுமாதான் பார்த்துக்கொண்டே வந்தார். இருக்குற அன்பிற்கு மேல இரண்டுக்கும் ஈகோ, கோபம்...இப்போ அழவண்டியது என்று வருத்தபட்டார்.

ஷ்ரவன் "சிட்டியில் பெரிய ஹாஸ்பிட்டல் எதுவோ, அதுவும் பக்கத்தில் இருக்குற மாதிரி...பார்த்து போ" என்றான்.

அதற்குள்ளாக அஜய் வண்டியை கிருஷாணாவின் மருத்துவமனைக்கே கொண்டுவந்திருந்தான்.

வேறு வழியின்று மனையாளைத் தூக்கியவன் உள்ளே கொண்டு சென்று அங்கே படுக்கையில் கிடத்தினான்...

கிருஷ்ணா மகளைப் பரிசோதித்து,வேறு ஒன்றுமில்லை பசியிலும், கர்ப்பகால மயக்கமும்தான் என்றதும் கொஞ்சம் நிதானமானார்கள்...

ஷ்ரவனோ இப்போதுதான் அவளது கைகயைப் பார்க்க...ட்ரிப்ஸ் உறுவ விட்டுப்போனதினால் இரத்தக்கறை இருந்தது...அதை அப்படியே ஷ்ரவன் துடைத்துவிட்டவன்.

கிருஷ்ணாவைப் பக்கத்தில்கூட வரவிடவில்லை...அவர் எதாவது செய்து வைத்துவிடுவாரோ என்று பயந்தான்..

அதிகாலையில் நன்கு தெளிந்துக் கண்விழித்தவள் பார்த்தது...ஷ்ரவன் அவளருகில், அதே பெட்டில் இடித்துக்கொண்டு படுத்திருந்தான்...

அவள் இறங்க முற்பட அந்த அசைவில்

ஷ்ரவன் கண்விழித்தவன்...அவளது கையைப்பிடித்து மறுபடியும் படுக்கவைத்து... அப்படியே அவளது இடுப்போடு கைப்போட்டு படுத்துக்கொண்டான்.

அவனது கையை எடுக்க முயன்றாள் முடியவில்லை...அழுகையாக வர.

“ என் பாப்பாவ வேண்டாம்னு சொல்லிட்டுப் போனவங்களுக்கு. இப்போ என்ன என்மேலயும் பாப்பா மேலயும் புதுசா என்ன அக்கறை.” என்றவளின் சத்தம் கேட்டு வெளியே இருந்த கிருஷ்ணாவும் ஓடிவர...

" என்ன அம்மு சத்தம்போடுற...

இப்படிலாம் இந்த நேரத்துல சத்தம்போடக்கூடாது" என்றார்.

ஷ்ரவன் "மாமா கொஞ்சம் இருங்க...நீங்க என்ன செய்யலாம்னுக் கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னேன்.என் குழந்தை எனக்கு வேணும்...தயவு செய்து எதுவும் செய்திடாதிங்க,

அப்புறம் இதை கொஞ்சம் உங்க மகளுக்கும் புரியவைங்க” என்றான்.

கிருஷ்ணா "அம்மு வா வீட்டுக்குப்போகலாம்" என்க.

ஷ்ரவன் "என் மனைவிய நான் என் வீட்டிற்கு அழைச்சிட்டுப் போறேன்” என்றான்

கிருஷ்ணா நொந்துப்போனார், பெத்ததுதான் நம்மல சுத்தல்ல விடுதுன்னா..வந்ததும் இப்படியிருக்கு என்று முழித்துக்கொண்டு நின்றார்...

அத்தியாயம்-16

ஷ்ரவன் “என் மனைவியை நான் என்னோடு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லவும் கிருஷ்ணா என்ன சொல்ல என்று முழித்துக் கொண்டிருக்க.அந்த நேரத்தில் உள்ளே வந்த சுமித்ரா "மாப்பிள்ளை அது இந்த நேரத்துல அவளுக்கு ரொம்ப மயக்கம் வரும், ரொம்ப வீக்கா வேற இருக்கா...வாந்தி அடிக்கடி வரும்..நீங்க எப்படி அவளை பார்த்துக்க முடியும்?

 நாங்க எங்க வீட்ல கொஞ்ச நாள் வைச்சு கவனிச்சு விடுறோமே, அப்புறம் உங்க வீட்டுக்கு அனுப்பி விடுறோம்” என்று சமாதானம் பேசவும்.

ஷ்ரவன் இப்பொழுது ஹரிதாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ அவனது பார்வையை சந்திக்காமல் கீழே குனிந்து கொண்டாள். 

இதைப் பார்த்த பெரியவர்கள் இருவரும், அவர்களுக்குத் தனிமைக் கொடுத்து, மெதுவாக அறையில் இருந்து வெளியே செல்லவும், அவன் அவளது அருகில் வந்து, “நேரம் பார்த்து என்னை நல்ல பழிவாங்குற அப்படித்தானே?..” என்று அவளை முறைத்துக் கொண்டே கேட்டான்.

அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து "அப்படி ஒன்னும் இல்ல, நீங்க தானே நானும் வேண்டாம், பாப்பாவும் வேண்டாம்னு சொன்னீங்க.நான் உங்க கூட வரமாட்டேன், அப்பா வீட்டுக்கும் போகமாட்டேன். நான் வேற எங்கேயாவது போறேன்” என அழுதுகொண்டே சொல்லவும்.

ஷ்ரவனுக்கோ ஹரிதா பேசியதை கேட்டதும்.. இப்பொழுது இழுத்து வச்சு நல்ல நாலு அரை விடலாமா என தோன்றியது.

“ சின்ன பிள்ளை மாதிரி பிஹேவ் பண்ணாத ஏற்கனவே நேற்று முழுவதும் உன்னைத் தேடி அலைந்துக் கண்டுபிடித்து இருக்கு.. யோசிக்கவே மாட்டியா நாம என்ன பண்றோம் என்ன பேசுறேம்னு...சாகடிக்குற என்னை.

நான் நினைக்கிறேன் உங்க அப்பா உன்னை ஆர்டர் பண்ணி செய்து வாங்கி இருப்பாருனு..இப்படி ஒரு மேக்வேண்டும்னு... கண்டிப்பா பெத்தமாதிரி தெரியலை.

மனுஷன கல்யாணத்துக்கு முன்னாடியும் படுத்தின. கல்யாணத்துக்கு அப்புறமாவும் படுத்தி எடுக்கிறடி. என்னடி நினச்சிட்டு இருக்க உன் மனசுல? எல்லாரும் உன்னோட தாளத்துக்கு ஆடுவாங்கனா?..”

அப்பொழுது ஹரிதாவை செக் பண்ண உள்ளே வந்த காவ்யா, ஷ்ரவன் சத்தம் போட்டு பேசுவதை கேட்டுகொண்டே தான் உள்ளே வந்து இருந்தாள்.

அவளை முழுவதுமாக பரிசோதித்துவிட்டு ஹரிதாவிடம் "இன்னைக்கு நீ வீட்டுக்கு போகலாம். ஆனால் சாப்பாடு எல்லாம் சரியா சாப்பிடணும், மாத்திரை மருந்துகள் எல்லாம் சரியா எடுத்துக்கணும்...இப்போ நீ ஒரு ஆளு இல்ல உன் வயித்துல இருக்குற பிள்ளையும் உன்னை நம்பி தான் இருக்கு அதனால கவனமா இரு” என்று அவளை அதட்டினாள்.

காவ்யா மெதுவாக ஷ்ரவனை தனியாக அழைத்து "அண்ணா, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. இப்போது ஹரிதாவின் மனநிலை உடல்நிலை எதுவுமே அவளோட கட்டுப்பாட்டிலயே இருக்காது, ஹார்மோன் ஏற்றயிறக்கமா இருக்கும், அவளோட மன எண்ணங்கள் மாறுபடும், இது கர்ப்ப கால பிரச்சினைகளில் ஒன்று, உங்க பிள்ளைக்காக மனைவிக்காக நீங்க கொஞ்சம் பொறுமையா போறதில தப்பு இல்லையே, ரொம்பவும் மனவுளைச்சல் ஆகிட்டுனா அது சிலநேரம் அபார்ஷனாகக்கூட வாய்ப்பிருக்கு.

அதுவுமில்லாமல் நீங்க நேத்து பேசிட்டுப் போனதுதான் அவளோட மனசு முழுதும் இருக்கு. நேத்து என்கிட்ட போன்ல சொல்லி அழுதா.நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க.

ஒரு மருத்துவரா மட்டுமில்ல, அவ தோழியாகவும் நான் சொல்ல வேண்டியது உங்க கிட்ட சொல்லிட்டேன். இதுக்கு அப்புறம் உங்க கையிலதான் இருக்கு” என்றவள் டிஸ்சார்ஜ் சீட் எழுதிக் கொடுத்தாள்...

காவ்யா சொன்னதைக் கேட்டு... அவன் சிறிது அமைதியானவன்,

அப்படியே ஹரிதாவின் அருகில் அமர்ந்து விட்டான். 

இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை மெதுவாக ஹரிதாவின் கையை எடுத்து தனது கைக்குள் பொதிந்து வைத்துக் கொண்டான்...

காவ்யா வெளியே வரவும் அந்த நேரத்தில் ஷ்ரவனைக் காண அஜயும் உள்ளே வந்தான்.

காவ்யாவை கண்ட அஜய் முப்பத்திரண்டு பல்லும் தெரிய, அவளைப் பார்த்து சிரித்தான். அவளோ அவனை கண்டும் காணாதது போல ரவுண்ட்ஸ்க்கு சென்றுவிட்டாள்.

அஜய்க்கு கோபம் திமிரப்பாரேன்... தெரிஞ்ச பொண்ணாச்சேனு பார்த்து சிரித்தால், கண்டுக்காமல் போறது பாரு.. அது சரி இவ ஹரிதாவோட பிரண்ட்தானே அவளை மாதிரிதான் இருப்பா. செட்டு சேர்ந்திருக்கறதப் பாரேன்... ஒரே குணத்தில், என்று புலம்பியபடியே உள்ளே வந்தான்...

அஜய் உள்ளே வருவதை கண்டதும் ஷ்ரவன் ஹரிதாவின் கையை விட்டு எழுந்தவன். “வாடா ஆபிஸ் போகலையா?..” என்று கேட்கவும், " போகணும், உன்னைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்"

ஷ்ரவன் "எனக்கு ஒரு உதவிப்பண்ணு, நான் லேப்டாப் எடுத்திட்டு வரலை... இப்போ இருக்கறதுல மொபைல்ல டைப் பண்ணியும் சொல்லமுடியாது...நீ ஒரு லீவ் லெட்டர் டைப் செஞ்சி மேனஜர் மெயிலுக்கு அனுப்பிடு. அவருக்கிட்ட நான் பேசிக்குறேன்...சரி ஆபிஸ்க்கு நேரமாகிட்டு நீ கிளம்பு" என்று அவனை அனுப்பிவிட்டான்.

அஜயோ ஷ்ரவனை வெளியே அழைத்தவன், “தயவு செய்து இனியும் பிரச்சனைய பெருசுப் பண்ணாத...ஹரிதா நேத்து பத்திரமா கிடைச்சிட்டா அதால பிரச்சனையில்லை...யோசிச்சுப்பாரு வேற எதுவும்னா...ஹரிதா இல்லாமல் உன்னால வாழமுடிமா? முடியாதுதான...நேத்து ஒரு நாளுல பைத்தியக்காரன் மாதிரி அழைந்ததை நான் பார்த்துட்டுதான் இருந்தேன். நிதானமா யோசிச்சு எதுனாலும் முடிவெடு . அவ வேற விபரீதமா முடிவ எடுத்துடாதளவு பார்த்துக்க" என்று அவன் பங்கிற்கு சொல்லிட்டுப்போனான்...

போகிற வழியில் ஒரு அறையில் பேஷண்டைப் பார்த்துக்கொண்டிருந்த காவ்யாவைப் பார்த்தவன் நின்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்... அவள் ஏதோ உள்ளுணர்வு உறுத்த திரும்பி பார்க்க... அஜய் அவளை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். காவ்யா என்னவென்று கண்களால் கேட்க... “போடி” என்று சொல்லிவிட்டு நடந்துவிட்டான்... காவ்யா இதை எதிர்பார்க்கவில்லை சிறிது நேரம் அப்படியே நின்றவள்... “ லூசு” என்று சொல்லி சிரித்தாள். 

ஷ்ரவன் இப்போது யோசித்தான் என்னங்கடா ‘செய்த தப்பெல்லாம் அவ செய்திட்டு,எல்லாரும் எனக்கு அட்வைஸ் செய்திட்டுப்போறாங்க கொடுமைடா,அவ செய்ததெல்லாம் மறந்திட்டாங்க,

இப்போ என்ன செய்யலாம்’ என்று யோசித்தவன்.யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் ஹரிதாவை தனது கைகளில் தூக்கவும், திமிறியவளை இறுக்கிப்பிடித்து வைத்துக்கொண்டவன், காரில் கொண்டுவந்து படுக்க வைத்து சென்ட்ரல் லாக் போட்டு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

கிருஷ்ணாவும்- சுமித்ரவும் நல்லா வாழணும்னு நினைச்சு கல்யாணம் செய்துக்கொடுத்தா... இதுக இரண்டும் சேர்ந்து எல்லாரையும் பைத்தியமாக்கிடும்போல...

சண்டைப்போடுறாங்களா சமாதனமாகுறாங்களா கடவுளே உனக்குத்தான் வெளிச்சம் என்று அவரால் முடியாமல், கடவுளிடம் விட்டுவிட்டார்.

ஃப்ளாட்டிற்கு கொண்டு வந்து தனதறையின் படுக்கையில் படுக்வைத்ததும் அவள் இறங்கி... “ இங்க இருக்கமாட்டேன். நான் போறேன்” என்று வெளியே போவதற்கு நிற்க...

ஷ்ரவன் "ஏன்..."

"நான் வேண்டாம்னு... என்னை செத்துப்போகச் சொன்னல... நான் இல்லாம சந்தோசமா இருந்திடுவேனு சொன்னதானே, இப்போ என்ன பாசம் பொங்கிட்டு வருது...நேத்து எதுக்கு என்ன தேடி வந்த...அப்படியே செத்துப்போகட்டும்னு விட வேண்டியதுதான...” என்று கண்ணீர் வர வர துடைத்துக்கொண்டே பேசினாள். “பாப்பாவ வேண்டாம்னு உன்னால எப்படி சொல்ல முடிஞ்சது... உன்னைவிட்டு நான் வேற யவனையாவது கல்யாணம் பண்ணிப்பனோ...நம்மக் கல்யாணத்தை நிறுத்யிருந்தாலும், செத்துதான், போயிருப்பேன்... நீ தான் என்னை புரிஞ்சிக்கவேயில்லை...

உன் மேல காதலும் நம்பிக்கையும் இருக்கப்போய்தான்...டெக்ஸ்ஸாஸ்ல வச்சு உன்கூட குடும்பம் நடத்தினேன். நீதான் என்னை புரிஞ்சுக்கவேயில்லை...”

அதைப் பார்த்தவனுக்கு வளர்ந்த குழந்தை ஒன்று உதட்டை சுழித்துப் பேசுவதுபோல தோன்றவும்...

அப்படியே தன்னோடு அணைத்துக்கொண்டவன்... அவளது முதுகை நீவிக்கொடுத்தான். அப்படியே மெதுவாக அழுகையை நிறுத்தினவளை, படுக்க வைத்தவன் ... அவள் தூங்கவும் சாப்பாடு ஆர்டர் செய்து, வந்ததும் எடுத்துக்கொண்டு அவளை எழுப்பியவன் சாப்பாடு ஊட்டிவிடவும், தடுத்து தானே எடுத்து சாப்பிட்டாள்.

ஷ்ரவனக்கு அவள் செய்த செயலுக்கான கோபம் வருத்தமிருந்தாலும், தன் பிள்ளை என்றதும் தானாக எல்லா பிரச்சனைகளும் பின்னுக்குப்போனது,அதுவுமில்லாமல் நேற்று அவளைக் காணவில்லை என்றதும் உயிரைத் தொலைத்தவன்போல தேடி அலைந்ததிலயே இனி ஹரிதாவை விட்டு இருக்கமுடியாது எனத் தெள்ளத் தெளிவாக புரிந்தது...எவ்வளவுக் கோபம் வந்தாலும்... வெறுக்கமுடியாது என உணர்ந்துக்கொண்ட தருணம் அது...

ஹரிதாவோ அவன் பேசிய பேச்சக்களின் விளைவாக மனசு இறுகிப்போய்விட்டாள்.

மருத்துவமனையில் ஷ்ரவன் பேசிவிட்டு வந்ததும் தனியாக இருந்தவளின் மனம் முழுவதும் பலவித சிந்தனை.

வயிற்றில் கைவைத்து தனாகப் பேசிக்கொண்டவள் "உங்கப்பாவுக்கு நானும் வேண்டாமாம், நீயும் வேண்டாமாம், நம்ம எங்கயாவது போயிடுவோம். நமக்கும் யாரும் வேண்டாம்" என்றுதான் கிளம்பி ரெயில்வே ஸ்டேஷனுக்கு சென்றவளுக்குத் தெரியவில்லை எங்கப்போகணும் என... அப்படியே அமர்ந்தவளுக்கு மயக்கம் வர... கையில் இருந்த போனும், கவுண்டர்ல வாங்கிட்டு வந்த பணமும் காணாமபோயிட்டு.

அவள் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டு ஷ்ரவன் கூடவே வாழணும் என்று எல்லாவற்றையும் தாங்கியவளுக்கு... பிள்ளை வேண்டாம் என்று சொன்னதைமட்டும் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை,அதனால் வந்த மனயிறுக்கம்.

இப்போது சாப்பிட்டு முடித்து எழும்பும்போதே தள்ளாடியவள் தன்னையறியாமல் அவனைப் பிடித்துக்கொள்ள.அவனும் பதறி பிடித்து என்ன செய்து என்று கேட்பதற்குள் அவன்மீதே வாந்தியெடுத்துவிட்டாள்.

இதெல்லாம் அவனுக்கு புதுசாக இருக்க,பயந்தவன் அவளை எழுப்பி எல்லாம் சுத்தப்படுத்தி படுக்கவைத்தவன், தானும் குளித்துவந்து அவளருகில் வந்து படுத்து ஹரிதாவையே பார்த்துக்கொண்டிருந்தான், 

எப்படி சுறுசுறுப்பா இருந்தவள்... எதையோ பறிக்கொடுத்தவள் போல இருக்காளே.

நம்ம ரொம்ப படுத்துறமோ என யோசித்தவன், அவளதருகில் நெருங்கி படுத்து அவளது நெற்றியில் முத்தம் வைத்தான், அப்படியே கீழிறங்கி உதட்டில் பட்டும்படாமலம் ஒற்றியெடுக்க...

தூக்கத்திலயே அவள் சிரிக்க,அதைப்பார்த்தவனுக்கோ மனைவியை இறுக கட்டிக்கொள்ள ஆசை...அவ்வளவுதான். ‘இப்போயிருக்க மனநிலையில என்னவாவது பேசுவாள், மறுபடியும் சண்ணடைதான் வரும்’ என நினைத்தவன் விலகிப்படுக்க...அவளது டீஷர்ட் விலகி பளிங்குபோன்ற இடுப்போடு சேர்ந்து வயிறும் தெரிய குனிந்து கைகளால் தடவி, மென்முத்தம் பதிக்க ஹரிதா சிலிர்த்தாள், ஹாய் குட்டி பாப்பா நான்தான் உங்க டாடி பேசறேன்... அம்மாவ படுத்தாம சமத்தா இருங்க என்று பேசியவன் மறுபடியும் ஒரு முத்தம் வைத்து, சந்தோசத்தில் படுத்தவன் அப்படியே தூங்கிவிட்டான்.

எதோ பேச்சு சத்தம் கேட்டு எழும்பி அறைக்கு வெளியே வர, மொத்தக்குடும்பமும் அங்கிருந்தது...

எப்படி உள்ள வந்தீங்க... என்று முழித்துக்கொண்டு நின்றிருந்தான்...

நிருபமா மகனைப்பார்த்து “என்னடா சந்தோசப்படுறீயா, இல்லை வருதத்துல கேட்கறீயா” என்று கேலி செய்தார்.

சிறிது நேரம் எல்லாருடனும் அமர்ந்து பேசிக்கொணடிருந்தான். 

மகன் தனியாக கிடைத்ததும் "ஏன்டா இப்படி இருக்க? முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு...ஹரிதா எங்கடா?..”

எனக்கேட்டுவிட்டு மகனை அழைத்தக்கொண்டு அடுத்த அறைக்கு உள்ளே வந்தவர்.

“என்ன பிரச்சனை கதவைக்கூட பூட்டாம படுத்து தூங்குற...என்னாச்சு” என்று கேட்க,நேற்று நடந்தது...ஹரிதா காணமல்போனது என்று எல்லாவற்றையும் சொல்லி அவரது மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான்.

அன்னையல்லவா அவனை மடிதாங்கி “உன்கிட்டயும் தப்பு இருக்கு...ஷ்ரவன் ஒரு பொண்ணோட நம்பிக்கைய பெறாம அவளை காதலியா மனைவியா ஏத்துக்கிட்ட. கல்யாணம் பண்ணி வச்சா அவக்கிட்ட என்னடா பேசிவச்சிருக்க?

சரி விடு...ஹரிதா இப்போ இருக்குற நிலையில் நீ எவ்வளவு இறங்கிப்போனாலும் தப்பில்லை சரியா, விட்டுக்கொடுத்துப்போ” என்று அவர் பங்குக்கும் அட்வைஸ் செய்ய ...ஷ்ரவன் நொந்தேப்போனான்.

மடியிலிருந்து எழுந்தவன் "அம்மா நீங்களுமா... எல்லாரும் இப்போ அவளுக்குத்தான் சாதகமா பேசுறீங்க... என்னைய யாரவது நினைச்சுப் பாக்குறீங்களா?வரவன் போறவன்லாம் அவள நல்ல பாத்துக்கோங்க... கவனமா பாத்துக்கோங்க... என ஓரே கருத்து சொல்றாங்க.

நான் இல்லாம எப்படி அவ இப்படி ஆனாலாம்...” என்றவன் எழுந்து வெளியே போய்விட்டான்.

நிருபாமாவிற்கு அவனை நினைத்து சிரிப்புத்தான் வந்தது. அம்மாவிடம் எல்லா வளர்ந்த ஆண்பிள்ளையும் தன்னுடைய சிறுபிள்ளைத்தனத்தைக் காண்பிப்பது வழமைதான்...அதைத்தான் ஷ்ரவனும் செய்தான்.

இன்னும் சிறிது நேரத்தில் நிரு பேபி என்று வந்து நிற்பான் என நன்றாகத் தெரியும்.அக்ஷராவின் பிள்ளைகள் இரண்டும் அத்தையை எங்க என்று கேட்டு ஹரிதாவைத் தேடி அறைக்குள்ளயே வந்து அவளை எழுப்பவும் விழித்துப் பார்த்தவள்... சிறிது நேரம் எங்கயிருக்கோம் என்பதை யோசித்து தனது கனவனைத்தேட அவன் அங்கில்லை.

நிருபாமா அருகில் வந்து எப்படிமா இருக்க என்றவர் அவளது தலையை மெதுவாக வருடியவர்... “ எதாவது குடிக்குறியா” என்றதும். “காபி குடிக்கணும்போல இருக்கு” என்றதும்.

“ காபி இந்த நேரத்துலக் குடிக்ககூடாது... வாந்தி வரும்” என்றவர் “உனக்கு வேற புளிப்பா எதாவது ஜீஸ்போட்டுத்தர சொல்றேன்” என்றவர்...

அன்னமா " ஆரஞ்சு ஜீஸ் போட்டுக்கொண்டுவாங்க" என்றதும்.

ஹரிதா யாரு என்று முழிக்க... சென்னையில இருந்து நம்ம வீட்ல வேலை செய்தவங்களை கூட்டிட்டு வந்திருக்கோம் என்றதும் எல்லாரும் வந்திருக்கீங்களா... என்று எழும்பினவளுக்கு உடல் தளர அப்படியே மறுபடியும் அமர்ந்துக்கொண்டாள்.

“முடியலைனா இரு...மாமாவும் அண்ணனும்தான நம்ம வீட்டு ஆளுங்கதான இரு,” என்றவரை நன்றியுடன் பார்க்க. “நானும் இரண்டுபிள்ளைங்களுக்கு தாய்தான்...” என்று பேசியவர்... அவளிடம் எல்லா விபரங்களையும் கேட்டுத் தெரிந்துக்கொண்டார்.அவருக்கும் சந்தோசமே,எதிர்பாரது கிடைத்ததல்லவா,தனது ஒரே மகனின் வாரிசு.

இரவு ஷ்ரவன் வரவும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு...ஷ்ரவனை கேலி கிண்டல் செய்து சிரிப்புடனே அந்தநாள் கழிந்தது.

ஹரிதாவோ இரவுப்பொழுதில் ஷ்ரவனிடமிருந்து தள்ளியே இருக்க.அவனோ மனையாளுடன் எப்படி ஒன்றலாம் என்று அவளிடம் நெருங்க...ம்ஹூம். வாய்ப்பில்லை.

அஜயோ காவ்யாவிற்கு மெசேஜ் அனுப்ப, அவளோ தெரிந்தும் தெரியதவள் போல. “ யாரு நீங்க...உங்களுக்கு என்ன வேண்டும்” என்று பதில் அனுப்பிக் கேட்க.

கடுப்பானவன் அப்படியே பேனில் அழைத்துவிட்டான்.அழைப்பை ஏற்றவள். அமைதியாக இருக்க...

"என்ன மேடம்...தேவையிருந்தா நீங்களே வழிய வந்துப்பேசுவீங்க, இல்லைனா என்ன யாருனுக் கேட்பீங்களோ?அப்படித்தானே” என்று கோபத்தில் பேச...

காவ்யா அமைதியா இருக்க...

"என்ன டாக்கடர் மேடம் உங்க கிட்ட பதில் இல்லையா"

"சாரி, ஹரிதா விசயமா காலையிலயே கொஞ்சம் டென்சன்... அதான் கேபமா இருந்ததுல, உங்ககிட்ட பேசவில்லை"என காவ்யா சொல்லவும்.

அஜய் அப்படியே காவ்யாவிடம் மெல்ட்டாகி நிற்க... “ ஹலோ... ஹலோ லைன்ல இருகீங்களா?...” என்றதும்.

“ லைன்லதான் இருக்கேன்” என்றவள்... “ நாளைக்கு நம்ம இரண்டுபேரும் மீட் பண்ணலாமா” என்று நேரடியாக கேட்க... காவ்யா ‘என்னடா இவன் இவ்வளவு பாஸ்ட்டா இருக்கான்’ என யோசித்தவள்... “ சரி” என்று பதிலளித்தாள்.

“ நான் இப்போ தூங்கப்போறேன் குட் நைட்” என்று போனை வைத்துவிட்டாள். இதுக்கு மேல பேசினா நம்மளே அவன்கிட்ட வேற எதாவது சொல்லிடுவோம் என்று.

அஜய்... ‘வாடி என் டாக்டரு. மனுஷனை சுத்தல்ல விடுற... இரு உன்னை கோழி அமுக்குனாப்ல அமுக்கிடுறேன்’ என்று நினைத்தவன் சிரித்துக்கொண்டான்.

அத்தியாயம்-17

அடுத்தநாள் காலையில் அஜய் காவ்யாவிற்கு மெசேஜ் அனுப்பி “ எப்போ சந்திக்கலாம், எங்கே சந்திக்கலாம்” என்று கேட்டிருந்தான்...

காவ்யா பதில் அனுப்பியிருந்தாள் "எனக்கு மார்னிங்க் ட்யூட்டி, மாலை சந்திக்கலாம் நீங்களே இடம் சொல்லுங்க வர்றேன்" என்று.

அதற்காகவே ஆபிஸிலிருந்து ஷ்ரவனிடம் பெர்மிசன் வாங்கி மாலையில் சீக்கிரமாக வந்தவன், காவ்யாவை சந்திக்க தயாராகயிருந்தான். 

ரெஸ்ட்ராண்டிற்கு வந்த அஜயோ ரொம்ப சந்தோசமாக,காவ்யாவிற்காக காத்திருந்தான்...ஏற்கனவே டேபிள் புக் செய்துவிட்டு அவளுக்கு தகவலும் அனுப்பியிருந்தான்.

காவ்யா சிறிது நேரங்கழித்து வந்தவள் 

"சாரி நீங்க வண்டிக் கொண்டு வரவேண்டாம்னு சொன்னதுனால டேக்ஸியில் வந்தேன் லேட்டாகிடுச்சு” என்று சொன்னவள், அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும் அவள் அவனது கண்களை பார்க்க, புடவையில் வந்திருந்தாள்,அஜயின் கண்களோ அதைத்தான் ரசித்துக்கொண்டிருந்தது.

அஜயின் எதிர் இருக்கையில் அமர்ந்தவளைப் பார்த்த அஜயோ "வாவ்" என்று சொல்லவும், அவளுக்கு வெட்கம் வர அப்படியே தலையை திருப்பி வேறு எங்கயோ பார்க்கின்ற மாதிரி இருந்துக்கொண்டாள்...

அவளது கரத்தினை தனது ஒருவிரல் கொண்டு தொட...அவள் தனது விரல்களை மடக்கி வைத்தாள்.

மறுபடியும் தனது விரலைக்கொண்டு அவளை சீண்ட...

நிமிர்ந்து அவனை சிரித்துக்கொண்டே முறைக்க... அஜயோ கண்ணடித்தான்.

காவ்யாவின் கண்கள் அஜயின் பார்வையை கவ்வ...

“ எதோ பேசணும்னு சொன்னீங்களே?..”என்றவள் அவனது பார்வைய சந்திக்கமுடியாமல் குனிந்துக்கொண்டே கேட்டாள்.

அஜயோ “ என்ன பேசக்கூப்பிட்டிருப்பேனு உனக்குத்தெரியாதா??? ம்ம்...”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் 

"தெரியலையே" என தனது புன்னகையை தனது இதழுக்குள் அடக்கினாள்.

“ ஓ... உனக்கு நான் என்ன பேசப்போறேனு தெரியாது அப்படித்தான? சரி எனக்கும் மறந்துப்போச்சு... வா வீட்டுக்கு போகலாம்” என்றதும்... அவன் இப்படி சொல்லுவான் என்று எதிர்பார்க்காததால்,என்ன செய்ய என்று திரு திருனு முழிப்பது இப்போது காவ்யாவின் முறையாயிற்று.

அஜய்க்கு சிரிப்புத் தாங்கமுடியலை,

அதைப்பார்த்த காவ்யாவோ அவனது கையில் கிள்ளி வைத்தாள்...

அவனோ அவளது கையைப்பிடித்து இழுத்து தன் பக்கத்தில் இருத்தியவன், அவளது கையில் முத்தம் வைத்து "ஐ லவ் யூ டியர்" என்றான்.

அவன் காதல் சொல்வான் என்று எதிர்ப்பார்த்துதான் வந்தாள். ஆனால் அஜய் அவனோட காதலை சொன்னமுறை அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்து... அவன் கண்களில் காதல் வழிந்தோட காவ்யாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்...

காவ்யாவோ தனது ஒற்றைச்சிரிப்பில் அஜயின் காதலை ஏற்றுக்கொண்டேன் என்று பதிலைத் தந்திருந்தாள்.

இருவரும் உணவு வரவைத்து சாப்பிட்டு கிளம்பவும் அவளுக்கு அழைப்பு வந்தது...யாரென்று எடுத்துப்பார்க்க அவளது தந்தையென்றதும் எடுத்து பேசியவள்... சிறிது யோசனையில் இருக்க அஜய் அவளது சிந்தனையைக் கலைத்து என்னவென்று கேட்டான்.

“ அப்பா பேசினாங்க அதனாலதான்” என்று காவ்யா சொல்லவும், “ அதுக்கு எதுக்கு யோசனை வா...” என்று கையைப்பிடித்து இழுத்து “ வா போகலாம்” என்று வெளியே அழைத்து வந்தான்.

அஜய் தனது வண்டியில் கொண்டுவிடுவதாக சொல்லவும்...சிறிது பயந்தாலும் அவனது வண்டியில் ஏறி உட்கார அஜயின் வாயெல்லாம் பல்லாக இருந்தது.

காவ்யாவோ "என்ன சிரிப்பு ஒரு மாதிரியா இருக்கு, பிரேக் போடாம வண்டிய ஓட்டனும், இல்ல அடிதான்” என்று மிரட்டினாள்.

போகின்ற வழியில் மரங்களடர்ந்த அந்த அவென்யூ பகுதியில் வண்டியை நிறுத்தியவன், அவளை இறங்கச்சொல்லவும் சிறிது பயந்தவள்...

“ ஏன் இங்க நிறுத்தினீங்க?..” பயத்துடன் கீழே இறங்கவும், அவளை முறைத்துப் பார்த்தவன், “ ஏன்டி ஹரிதா பிரண்டுனு அடிக்கடி நிருபிச்சுருவியா...

சந்தேகமா பார்க்குற நம்பிக்கைவைங்கடி” என்றவன், இறங்கி தனது பைக்கில் வைத்திருந்த ஒரு பூங்கொத்தை எடுத்தவன் அப்படியே நின்றான்..

காவ்யாவிற்கு இப்போது புரிந்தது எதற்கு வண்டியை நிறுத்தினான் என்று,தனது நயனங்களினாலே மன்னிப்புக் கேட்டவள் அவனிடம் நெருங்கினாள். மெதுவாக அந்தப்பூங்கொத்தை அவளது கையில் கொடுத்து "என்னோட வாழ்க்கையில் பாதியாக வரப்போகும் என் தேவதைக்கு இந்தப் பூக்கள்” என்று அவளிடம் கொடுத்து, தனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து சிறிய பாக்ஸ் ஒன்றை எடுத்தவன் அதிலிருந்த ஒரு மேதிரத்தை அவளது கரங்களில் போட்டுவிட்டான்.

ஃப்ரீசிங்க் மொமண்ட் என்று சொல்லும் நிலை காவ்யாவிற்கு. அவளாகவே அவனிடம் நெருங்கி நிற்க.

அவளது கையை சுழற்றிப்பிடித்து இழுத்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது இதழை

தன் வசப்படுத்தியிருந்தான்...

அவ்வளவுதான் காவ்யாவோ தன் முட்டைக்கண்ணை விரித்து அவனைப்பார்க்க... அஜயோ தனது கண்களால் அவளுக்கு கண்ணைமூடு என்று சைகை செய்ய... அவனது முத்தத்தின் கிறக்கமோ என்னவோ? காவ்யாவும் கிறங்கி கண்களை மூடினாள்...

அவளது உயிரை ஒற்றை முத்தத்தில் உறிந்தெடுத்துவிட்டான்.

அவளை தன்னிடமிருந்து பிரித்து கிளம்புவோமா என்று அஜய் கேட்கவும், தன் உணர்வு வந்தவள் சரி எனத் தலையாட்டினாள்.

காவ்யாவின் வீட்டினருகே கொண்டு வந்துவிட்டவன், “ பை” என்று கண்ணடித்து சென்று விட்டான்.

இருவரும் தங்களது காதலை பரிமாறி கொண்டதால் அவ்வளவு உற்சாகம் இருவருக்குள்ளும்.

காவ்யாவோ தனது உதட்டினை பிடித்து தடவிக்கொண்டே" ராஸ்கல்... சாதுனு நினைச்சா,ஒரு முத்தத்திலயே மிரட்டிட்டுப் போறானே” என்று வீடு நோக்கி செல்ல.அவளது காதலின் வில்லனும் அவளது பின்னே சென்றான்.

அங்கு ஷ்ரவன் வீட்டிலோ எல்லோரும் சென்றிருக்க நிருபாமா மட்டும் இருந்தார்...அவர் மகனையும் மருமகளையும் இந்த ஒருவாரத்தில் சரியாக கணித்துவிட்டார்.

ஒருவொரையெருவர் மிகவும் காதலிக்கின்றனர்... ஆனால் இரண்டுக்கும் அது புரியவேயில்லை... முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்றதுபோல அந்த மியா பண்ணின வேலையில இரண்டும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிட்டு இருக்காங்க என்று எல்லாம் அலசி ஆராய்ந்தவர்.

ஹரிதா இப்போ இருக்கற நிலமையில் இரண்டும் ஒன்னா இருந்தா சண்டைதான் போட்டுக்கும்... சரியில்லையே! என்று தன் சந்ததிக்காக தானே யோசித்தவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

ஹரிதாவை அழைத்தவர் “ எப்போ மா உனக்கு வேலையில் ஜாயின் பண்ணனும்?..” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். 

அவளோ “ 20 நாள் லீவு எடுத்திருந்தேன் அத்தை. இன்னும் இரண்டு நாள்ல ஜாயின் பண்ணனும்,ஆனா எப்படின்னு தெரியல இப்பயிருக்குற ஹெல்த் கண்டிஷன் வேற சரி இல்ல. வாந்தி ரொம்ப வருது” என அவரிடம் குறைபட்டுக்கொண்டே... “ எப்படியும் வேலைக்கு போகதான் வேண்டும். எப்படி?..” என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

“ நானும் சென்னைக்கு போயிடுவேன். உன்னால் எப்படி வேலைக்கு போக முடியும்? ஒரு ஆள் வேணுமே” என்று மெதுவாக யோசித்ததுபோல இருந்தவர், “ ஒன்னு செய்யேன் அம்மா வீட்டில் இருந்து வேலைக்கு போறியா? முடியலைன்னா வேலையை ரிசைன் பண்ணிடு... கஷ்டமா இருந்துச்சுனா வேலையை விட்டுட்டு வந்திரு...” மெதுவாக அவளது மனதை குழப்பி விட்டார்.

ஹாரிதா தானிருந்த மனநிலையிலயே யோசித்தவள். அத்தை சொல்றது தான் சரி, அம்மா வீட்டில் இருந்து வேலைக்கு போவோம் என்று முடிவு எடுத்திருந்தாள்.

மாலையில் வேலையவிட்டு வந்தவன் தனது அறைக்குள் சென்று ஃப்ரஷ்அப் ஆகி வந்தவன்... மனைவி ரொம்ப அமைதியாக இருக்கவும்.

‘ என்னடா புயல் ரொம்ப அமைதியாக இருக்கு’ என்று நினைத்தவன்... அவளின் அருகில் வந்து அமர்ந்து. “ ரிது பேபி என்னடா மாமாவ வரவரக் கண்டுக்கவே மாட்டுக்க?...” என்று அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான்... அப்பவும் ஹரிதா அமைதியாக இருக்கவும், சந்தேகம் வந்தது அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன்,பயந்து “ ரிதும்மாஆர் யூ ஓகே?..” என்று அவளது கையைப்பிடித்துக் கேட்டான்.

ஹரிதா "என்னைய பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கா” என்று கேட்டகவும், ஆசுவாசம் அடைந்தவன்.. “ ஹப்பா என் பொண்டாட்டி நார்மலாகத்தான் இருக்கா” என்று சொல்லிக்கொண்டே எழும்ப ...அவனை முறைத்துப்பார்த்தாள்.

ஹரிதாவின் வாந்தி மயக்கம் இன்னும் தொடர்வதால்.அவளின் நிலையைப்பார்த்து தன்னால் எதுவும் அவளுக்கு உதவமுடியவில்லையே என்று வருந்துவான்.

அந்த நேரத்தில் அவளது அருகில் சென்று தன் மார்போடு சாய்துக்கொள்வான்... சில சமயம் அவளின் கோபம் அவன் பக்கம் திரும்பும், ஆனாலும் தாங்கிக்கொள்வான், தன் ரிதுபேபிக்காகவும், தனது பேபிக்காகவும்.

இருவரும் இன்னும் நிறைய விசயங்கள் மனமிட்டு பேசவில்லை... பேசினாலும் பேசாவிட்டாலும் இவள் என் மனைவி என்று மனதில் ஆயிரம் முறை உருப்போட்டு வைத்துக்கொண்டான்.

நிருபாமா அன்றிரவு சாப்பாட்டு நேரத்தில் இருவரிடமும் பேசினார். “ நான் நாளைக்கு சென்னைக்கு போறேன். ஹரிதா கொஞ்ச நாளைக்கு அவங்கம்மா வீட்ல இருக்கட்டும்... அவ அங்க இருக்கறதுதான் நல்லது...” என்று சொல்லி முடிக்கவில்லை.

ஷ்ரவன் "நான் அவள அங்கெல்லாம் அனுப்பமாட்டேன். அங்க போனா அவங்கப்பா என் பிள்ளைய எதாவது பண்ணிடுவாங்க. அவரு டாக்டர் வேற,என்கிட்டவே என்ன செய்யனும்னு கேட்டவருதான,நான் என் பொண்டாட்டிய யாருவீட்டுக்கும் அனுப்பமாட்டேன்.

நீங்க இதுல தலையிடாதிங்க, என்பிள்ளை விசயத்துல யாரோட முடிவையும் நான் கேட்கமாட்டேன், நீங்க உங்க வேலையைப் பாருங்க” என்று சொல்லி முடிக்கவில்லை.

நிருபாமா அறைந்த அறையில் ஷ்ரவன் தன் கன்னத்தைப் பிடித்தபடி நிற்க, ஹரிதாவோ தன் கணவனை அவரது அம்மாவே ஆனாலும் அடிச்சது பிடிக்கவில்லை.

ஓடிப்போய் ஷ்ரவனின் அருகில் நின்று அவனது கரத்தைப் பற்றிக்கொண்டாள்...

அவளது கையை உதறியவன் சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டான்.

இதுவரைக்கும் ஷ்ரவனை வீட்டில் யாருமே அடித்ததில்லை... முதன்முறையாக தனது தாயிடம் அடி வாங்கிருக்கிறான்.

நிருபாமாவிற்கோ இன்னும் கோபம் குறையவில்லை "என்ன என் பிள்ளை என் பிள்ளைனு ஓவரா துள்ளுற.

உன்னை பெத்து இருபத்தியேழு வயசுவரைக்கும் வளர்த்திருக்கேன்... அப்போ நான் எப்படி பேசனும்.

ஹரிதா அப்பாவை பேசுற பிள்ளை வயித்துல வந்து நாற்பத்தைந்து நாள்தானா ஆகுது.அதுக்குள்ள எவ்வளவு பாசம் இருபத்தி நாலு வருசமா வளர்த்தவருக்கு தெரியாதா தன் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுனு.அவரையும் மதிக்காம ஹரிதாவை இங்க தூக்கிட்டு வந்திருக்க,எல்லாம் உங்க இஷ்டம்னா, குடும்பம்னு நாங்க எதுக்கு இருக்கிறோம்?.

ம்ம்..சொல்லு" என்று கோபத்தில் ஷ்ரவனை ஒரு வழியாக்கிவிட்டார்.

“ நீங்களா ஒரு விசயத்தை தான்தோன்றித்தனமாக செய்துட்டு இப்போ வந்து குத்துதே குடையுதேனு எகிறி குதிக்ககூடாது.”

ஷ்ரவன் எதுவுமே எதிர்த்து பேசவில்லை... ஷ்ரவனுக்கே தெரியும் அம்மா அவ்வளவு சீக்கிரத்தில் கோபப்படமாட்டார், அப்படிக் கோபபட்டாங்கனா, கண்டிப்பா நம்மமேலதான் தப்பு என்று அமைதியாக இருந்தான்.

ஹரிதா ஐஸ் கட்டி எடுத்து வந்து ஷ்ரவனின் கன்னத்தில் வைத்து தடவிவிட்டாள். நிருபமா அவ்வளவு வேகமா ஒன்னும் அடிக்கலைதான், ஆனாலும் அவனுக்கு வலிக்குமோ என்று தடவிக்கொடுத்தாள்.

நிருபமாவிற்கு தலையிலடித்துக் கொள்ளலாமானு இருந்துச்சு.இந்த இரண்டையும் எந்த வகையில சேர்க்கிறதுனு தெரியலை.என்னமோ பண்ணிக்கோங்க என்று விட்டுவிட்டார்.

சிறிது நேரங்கழித்து நிருபமா வந்து பார்க்க ஹரிதா மட்டும் முன்னறையில் சோபாவில் தலைசாய்த்து படுத்திருந்தாள்.

வந்தவர் “ ஷ்ரவன் எங்க?..” என்று கேட்கவும், 

"அவங்க கார் சாவியை எடுத்திட்டு வெளியப்போயிட்டாங்க" என்று சொன்னவளின் குரல் அழுதமாதிரி இருந்தது.

"ஏன் அத்தை அவங்கள அடிச்சீங்க?"

அவளை ஆரய்ந்துப் பார்த்தவர், “என் மகன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு நீ எனக்கு சொல்லித்தர்றியா என்ன? என் மகனை அடித்தேன் அது அவனோட வாழ்க்கைக்காக. அதை உன்கிட்ட விளக்கணும்னு இல்லை புரியுதா...உங்க கணவன் மனைவிக்குள்ள நான் என்னைக்காவது இடையில நுழைந்திருக்கேனா? இல்லைதான. அதேமாதிரிதான் இதுவும். எனக்கும் என் மகனுக்கும் இடையில் உள்ள விசயம். இதுல நீ தலையிடாத” என்று முடித்துவிட்டார்.

அப்படியே அமைதியாக இருந்தவள், தனது கணவனுக்காக காத்திருந்தாள். இரவு வெகுநேரம் சென்று வீட்டிற்கு வந்தவனுக்கு, ஹரிதா சென்று கதைவைத் திறக்க ஷ்ரவனுக்கு ஆச்சர்யம். தனக்காக காத்திருக்கா என்பதே அவனுக்கு சந்தோசம்...மெதுவாக “ அம்மா எங்க? அவங்க சாப்பிட்டாங்களா?..” என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

அதற்குள்ளாக ஷ்ரவனின் சத்தம் கேட்டு வெளியே வந்தவர்... அவனுக்கும் அவருக்குமாக தட்டில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து, அவனது கையில் கொடுத்து தானும் சாப்பிட்டார்.

ஷ்ரவனும் இப்போது சாப்பிட ஆரம்பிக்க...

ஹரிதா முழித்துக்கொண்டு நின்றாள். அம்மாவும் மகனும் எவ்வளவு புரிந்து நடந்துக்கொள்கின்றனர் என.

ஹரிதா தனதறைக்குள் வந்து படுத்துவிட்டாள். ஷ்ரவன் வந்துப்படுக்கவும் எழும்பி அவனது கன்னத்தில் கைவைத்து தடவிக்கொடுத்தாள். அப்படியே அவளது கையை தன் கன்னத்தோடு வைத்து பிடித்துக்கொண்டு திரும்பி படுத்தான்.

அவளது கண்களையே பார்த்திருந்தான். மெதுவாக அவளது நெற்றியில் முத்தமிட, அவளோ தனது கண்களை மூடினாள்.

ரிது பேபி "நாளைக்கு அம்மா உன்னைய உங்கப்பா வீட்ல கொண்டு விட்ருவாங்க... உனக்கு ஓகேவா"

அவளும் "ம்ம்" என்று தலையசைத்தாள்.

“ மூனுமாசம் முடியறவர அங்க இருக்கணுமாம்... நிருபேபியோட ஆர்டர்.”

இப்போதும்"ம்ம்"

“ என்னடி நீ ? என்னைவிட்டு இருந்துருவியா?..” என்று கேட்க.

சட்டென்று தனது கண்களை திறந்துப் பார்த்தவள் “தெரியலை” என்க...

ஷ்ரவனுக்கு இப்போது புரிந்தது... அவளால் சட்டென்று நீங்க இல்லாம என்னால இருக்கமுடியாது என்று சொல்லமுடியவில்லை எனில். அவள் இன்னும் குழப்பத்தில்தான் இருக்கின்றாள் என்று அர்த்தம். அம்மா சொன்னதுதான் சரி...

பிரிந்திருப்போம் எல்லாம் சரியாகுதானு பார்ப்போம்... என்று திரும்பி படுத்தான்.

ஹரிதாவோ அவனது மேல் கைகயைப்போட்டு அவனை ஒட்டிப்படுக்க,

நல்லவனா இருக்கவிடமாட்டாளே... என்று திரும்பி படுத்தவன் பார்த்தது ஹரிதாவின் கண்களில் கண்ணீர்... இரண்டாங்கெட்ட மனநிலையில் அவளும் இருக்கின்றாள்.

அதைப்பார்த்தவன் அவளது கண்களின் கண்ணீரைத் துடைத்தவன்... “ ரிது பேபி கண்டிப்பா உன்னை மிஸ் பண்ணுவேன்” என்றவன் இன்னும் நெருங்கிப்படுக்க...

அவளும் அவனது நெஞ்சோடு ஒட்டிக்கொள்ள.

ஷ்ரவனுக்கோ தனது கண்ட்ரோல் போக... “ தள்ளிப்படுடி” என்றான்.

அவளோ இன்னும் அவனை நெருக்கிக்கொண்டு படுக்க... சரிதான்.

இவா ஒருமார்க்கமாகவே இருக்காப்போல என அவனும் அவளை ஒரு மார்க்கமாக பார்ததுவைக்க... அவ்வளவுதான், ஷ்ரவனின் முழுக்கட்டுப்பாடும் அற்றுப்போக,மெதுவாக “ ரிது பேபி” என்றவன் அவளது கையை எடுத்து தன் மேல் போட்டவன்...

குனிந்து அவளது கழுத்தினில் முகம்புதைத்து அவளது வாசம் பிடித்தான்.

அதற்குள்ளாக ஹரிதா அவனின் சட்டையை கழற்றியிருந்தாள்...

அவளது நைட்ரெஸ் பட்டன்களை அவளே கழட்டி அவனோடு மேலாடையின்றி ஒட்டிக்கொண்டாள்... இளஞ்சூட்டுத்தேகம் அவனுக்கு மேலும் கிறக்கத்தை உண்டுப்பண்ண... அப்படியே தனது மடியில் அவளை முன்பக்கமாக,முகமாக இருத்தி அவளது தோள்களைப் பற்றி ஆடையற்ற அவளது முன்பக்கம் குனிந்து ஈர நாவினால் அவளது தனங்களை தொட்டு விளையாட, ஹரிதாவோ அவனது தோள்களை அழுத்தி அவனுக்கு வாகாக பின்பக்கமாக வளைந்துக்கொடுக்க, இன்னும் வசதியாக தனது பற்களின் மென்மையை பரிட்சித்துப் பார்த்தான் செவ்வரளி நிறக் கனிகளில்...

ஷ்ரவனோ கடித்து இழுக்க, அடிவயிற்றில் நரம்புகளின் ஊடுருவல் உணர்ந்து இன்னும் வேண்டும் என்று அவளும் இசைய அவனுமே இன்னும், பசியடங்காதொரு நிலையில் இரு கரங்களையும் அவளது முதுகில் பிடிமானமாக வைத்துக்கொண்டான், அப்படியே பின்பக்கமா சாய்ந்து படுத்தவன் ஹிதாவோ அவனது வயிற்றில் அமர்ந்திருந்தாள்.

ஆடையின்றிருந்தவளை அப்படியே படுத்தவாக்கிலயே ஷ்ரவன் ரசிக்க, கண்களால் அவளை மேய்ந்துக்கொண்டிருந்தான்.இப்போது தனது கைகளால் முன் அங்கங்களை மூட அதை தடுத்து அவளது கைகளை இறுபக்கமும் பிடித்துக்கொண்டு விடவில்லை.

"ஷ்ரவன் விடுங்க" என்று கூற, அவனோ இன்னும் கைகளை இறுக் பிடிக்க, அவளோ தனது கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவளது வெட்கமே இன்னும் ஷ்ரவனைத் தூண்ட...

ஹரிதாவினை மெதுவாக கீழே படுக்கவைத்து முழு ஆடையையும் உருவிய ஷ்ரவன். இவ்வளவு நாள் பசிக்கும் சேர்த்து அவளது அங்கங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து, அவனது கைகள் உடலெங்கும் விளையாட, நாவின் ஈரமும் உடலெங்கும் தேனெடுத்தது... 

ஹரிதவின் ஹார்மோன்களின் மாற்றமா ? இல்லை கணவனை விலகியிருக்கனுமே என்ற உள்ளுணர்வா? தெரியாது கணவனை தனது தேகத்தில் வழிநடத்தினாள் ஹரிதா...அவனின் ஒவ்வொரு செயலையும் ரசித்து, இன்னும் வேண்டுமடா என் நாயகனே என்று அவனை மேலும் தூண்டினாள்.

எப்போதுமல்லாமல் ஹரிதாவிற்கு ஷ்ரவனின் சேவை தேவை என்பதுபோல அவனை வேலை வாங்கிக்கொண்டிருந்தாள்... உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் ஷ்ரவன் உதட்டினால் அளந்தான்.

உணர்வின் உச்சத்தில் மெதுவாக அவளுக்குள் இறங்கியவனுக்கு இப்போது சிறிது பயம்,அவளிடம் வேண்டாம் என்க ஹரிதாவோ வேணும் என்க...

மனையாளின் பிடிவாதத்திற்கு இறங்கியவன்... எவ்வளவு மென்மையை கடைபிடிக்க முடியுமோ அவ்வளவு மென்மையாக இசைத்து அசைந்து ஹரிதாவின் பெண்மை களவாடினான். ஹரிதாவிற்கோ கணவன் தன்னைவிட்டு சிறிதும் இடங்கொடுக்கவில்லை.

எல்லாம் முடித்து இரு இளஞ்சூட்டுத் தேகமும் ஒன்றையொன்று, ஆடையின் தேவையின்றி ஒற்றைப்போர்வைக்குள் நீயின்றி நானில்லை என படுத்துக்கொண்டிருந்தனர்...

பாதியிரவில் எழுந்தவள் உடைமாற்றி,கணவனின் முகமெங்கும் முத்தமிட்டவள், அவனின் மீது கைப்போட்டுப் படுத்துக்கொண்டாள்.

அடுத்த நாள் காலைவேலையில் கிருஷ்ணா வீட்டினில் நிருபமா,ஷ்ரவன், ஹரிதா மூன்று பேரும் அமர்ந்திருக்க...கிருஷ்ணாவோ ஷ்ரவனை ஒருமார்க்கமாகப் பார்த்து வைத்தார்.

அத்தியாயம்-18

காலையில் எழுந்ததும் ஹரிதாவின் முகமே சரியில்லை... எழுந்து குளித்து கிளம்பியவள், ஷ்ரவன் எழும்புவதற்காக காத்திருக்க, அதற்குள்ளாக நிருபாமா அவளை அழைத்திருந்தார்.

“ என்ன அத்தை” என்று அவரின் அருகில் நின்றவளை பார்த்தவர் அன்னாம்மாவிடம் காலை டிபனுக்கு சொல்லிவிட்டு, மருமகளை தனியாக அழைத்து 

"வேலைக்குப் போறதை இப்போதைக்கு, ஷ்ரவன்கிட்ட சொல்ல வேண்டாம்... அதுக்கு வேற கோபப்படுவான், உன்னோட ஹேல்த்தும் பார்த்துக்க. உன்னோட வேலை விசயமா முடிவெடுக்க வேண்டியது நீ மட்டுந்தான் சரியா...” என்று அவளுக்கு சத்துமாவுக் கஞ்சி குடுத்தவர், மகனுக்கு காபி அவளது கையில் கொடுத்துவிட்டார்.

அறைக்குள் சென்றவள் ட்ரஸ் மாத்திக்கொண்டிருக்கும் கணவனையே பார்த்திருக்க, அவளது அருகில் வந்தவன் தனது டையினால் அவளை பிடித்து இழுத்தவன் “ என்ன ஒரே ரொமான்ஸ் பார்வையா இருக்கு என்ன விஷயம்...”

“ என்ன எங்கப்பா வீட்டிற்கு அனுப்பிட்டு... டைவர்ஸ் பண்ணிடுவியா” என்று பாவம்போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்பவளை என்ன செய்யலாம் என்று பார்த்தான்...

“அட அரைலூசே நேத்து நைட் வரைக்கும் உன்கூடத்தானக் குடும்பம் நடத்தினேன் மறந்துட்டியா.உனக்கு மூளையில எதுவும் கோளாறா” என்றான்.

“ கல்யாணத்துக்கு முன்னடியே உன்கூட இருந்ததுனால என்னை தப்பா நினைச்சுட்டு... வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பியோனு பயமா இருக்கு” என்றாள்.

ஷ்ரவனுக்கு இப்போது பிரச்சனையின் ஆணிவேர் பிடிபட்டது. மெதுவாக அவளை அணைத்துக்கொண்டவன். “ நீ என் வார்த்தைகளை நம்பவேண்டாம் ரிது பேபி. 

அட்லீஸ்ட் என்னைக் கவனி, என்னோட நடவடிக்கையக் கவனி அதிலயிருந்து உனக்கு நம்பிக்கை வருதானுப் பாரு... வார்த்தைகள் சில நேரத்துல பிரயோஜனமற்றதாகப் போயிடும் புரியுதா.

சண்டை போட்டாலும், என்னை பூரிக்கட்டையால அடிச்சாலும் சத்தியமா நீ மட்டுந்தான் என் பொண்டாட்டி” என அவளது தலையில் அடிக்க... ஹரிதாவிற்குமே சிரிப்பு வந்தது. அப்படியே இருவரும் வெளியே வந்து சாப்பாடு முடிந்து... மூவருமாக ஹரிதாவின் வீட்டிற்கு சென்றனர்.

கிருஷ்ணாவும் சுமித்ராவும் இதை எதிர்பார்க்கவில்லை... வரேவேற்று முன்னறையில் இருக்கசொல்லவும்தான் மாமாவும் மருமகனும் ஒருவருக்கொருவர் அன்பாக முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நிருபமா பேச ஆரம்பித்தார் "அண்ணா ஹரிதாவுக்கு உடல்நிலைக்கு இப்போதைக்கு இவங்க இரண்டுபேரும் தனியா இருந்தா, சமாளிச்சிக்க முடியாது.அவளோட ஹெல்த் சரியாகுற வரைக்கும் இங்கயே இருக்கட்டும்.ஒரு இரண்டுமாதம்போல, அதுக்கப்புறம் அவ உடல்நிலையைப் பார்த்து நம்ம யோசிப்போம்.உங்களுக்கு எப்படி.

உங்க அபிப்ரயாத்தையும் சொல்லுங்க"

“ அதுதான் நான் ஆரம்பத்துல இருந்தே சொல்றேன்,என்ன பண்ணப்போறேங்கனு கேட்டதுக்கு. நான் குழந்தைய என்ன பண்ணப்போறீங்கனு கேட்டதா தப்பா நினைச்சிக்கிட்டு சண்டைப் போடுறாரு மருமகன்” என்று கிருஷ்ணா ஆதாங்கப்பட.

இப்போது ஷ்ரவனுக்குப் புரிந்தது “ சாரி மாமா தப்பா நினைச்சிட்டேன்” என்றதும்,

“ மன்னிப்பு கேட்கறதுக்காக சொல்லலை மாப்பிள்ளை... புரிந்துகிகிட்டா சரிதான்” என்று முடித்துவிட்டார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நிருபமாவிற்கு சென்னையிலிருந்து கார் வந்துவிட... ஷ்ரவனிடம் “ கவனமாக இரு” என்று கூறிவிட்டு சென்னை நோக்கி பயனமானார்.(நடக்கப்போகும் விபரீதம் தெரிந்திருந்தால் ஷ்ரவனை தன்னுடனே அழைத்து சென்றிருப்பாரோ என்னவோ.)

ஆபிஸிற்குள்ளாக செல்லும்போது, அஜயோ பயங்கர குஷியாக வேலை செய்துக்கொண்டிருக்க... ஷ்ரவனின் வரவைக்கூட அவன் கண்டுக்கொள்ளவில்லை.

பாருடா பய ரொம்ப சந்தோஷமா இருக்கானே கீதாம்மா பொண்ணு எதுவும் பார்த்திட்டாங்களா? அவனை மொபைலில் அழைத்து என் “ கேபினுக்கு வாடா” என்று அழைக்கவும் அஜயோ “நீ ஆபிஸ்க்கு எப்போடா வந்த” என்று அவனிடமே கேட்க... ஷ்ரவன் கடுப்பானவன்... “ இப்போ வந்து தொலையேன்டா” என்று டென்சனாகிவிட்டான்.

ஷ்ரவன் உள்ளே வந்த அஜயிடம்... “ என்னடா மூஞ்சில தௌசண்ட் வால்ட்ஸ் பல்பு எரியுது, என்ன விசயம்?..."

அஜய் அப்படியா முகத்துல தெரியுது? என்று கேட்டதும் “அதுவாடா” என்று அஜய் வெட்கப்பட.

“ ஐயோ இந்தக்கொடுமை வேறயாடா, உன் வெட்கத்தை கொஞ்சம் கக்கத்துல வச்சுட்டு... அடேய் விசயத்தை சொல்லுடா, கடுப்பேத்தாத” என்று முறைத்தான் ஷ்ரவன்.

“ எனக்கு லவ் செட்டாகிடுச்சுடா... பொண்ணு சம்மதம் சொல்லிட்டு இனி பொண்ணு கேட்டுமட்டுதான் போகணும்,நீதான் எனக்கு மாப்பிள்ளைத்தோழன்” என்று சந்தோசமிகுதியில் ஷ்ரவனின் தோளைப்பிடித்துக் குலுக்கினான்.

“ வாவ்... வாழ்த்துக்கள்டா” என்று கைகுலுக்கியவன், “ பொண்ணு யாருடா” என்று கேட்டான்.

அஜய் " காவ்யா "

ஷ்ரவன் " என்னடா? எப்படிடா?..” எனக்கேட்டவன்.

“தெரியல மனசுக்குள்ள தோணிச்சு நேரடியா பேசிட்டேன்... அவளுக்கும் விருப்பம் அவ்வளவுதான் முடிஞ்சுது.பொண்ணு கேட்க நீதான் வரணும்” என்றான்.

ஷ்ரவனும் அஜயும் சேர்ந்து சிரித்துவிட்டு... “ விடுடா எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்” என்று ஷ்ரவன் வாக்குக்கொடுத்தான்.

ஷ்ரவனும் ஹரிதாவும் போனிலயே குடும்பம் நடத்திக்கொண்டிருந்தனர். ஷ்ரவனுக்கு ஹரிதாவை அங்கு சென்றுப் பார்க்க சங்கோஜமாக இருக்க...வாய்புக் கிடைத்தால் போகலாம் என்றுக் காத்திருந்தான்.

காலையில் ஆபிஸிற்குள் நுழைந்தவன் பார்த்தது... ஹரிதா லீவு முடிந்து வேலைக்கு வந்திருந்தாள்.கேபினில் நுழைந்தவன் மேனஜரிடம் விசாரித்துமுடித்தவன்.

ஹரிதாவை தனது கேபினுக்கு அழைத்தான், அவள் வந்ததும் “ சொல்லுங்க மேடம் நீங்களா எல்லா விசயத்திலயும் முடிவு எடுத்திட்டா... கணவனான எனக்கு என்ன வேலை வச்சிருக்கீங்க... உங்க கால் அமுக்கி விடுறதையா மேடம்” என்று கோபத்தில் கேட்டான்.

ஹரிதா "அது அத்தைக்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டேன்"

“ ஓ... உங்க அத்தைக்கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு, என்கிட்ட கேட்கத் தோணலை... எங்கம்மாகிட்ட கேட்டிருக்க... சரிங்க மேடம். ஆனால் ஒன்னு கவனம் என் பிள்ளையோடப் பாதுகாப்பு எனக்கு முக்கியம்.” என்று மிரட்டியே அனுப்பினான்.

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றுமே சொல்லாமல் அமைதியா சென்றுவிட்டாள்... இவர்களின் இந்த டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டை அவங்களா முடிச்சிக்க மாதிரியில்லை நம்மளா முடிச்சு வச்சிருவோம்னு கடவுள் அழகாகத் திட்டம் தீட்டிவிட்டார்.

அஜயும் காவ்யாவும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். காவ்யாவிற்கு அஜயை அவ்வளவு பிடித்தது... ஒவ்வொரு விசயத்திலும் நீ எனக்கு முக்கியமானவள் என்று தனது செயலின் மூலமாகவே நிருபித்துவிடுவான்.

அஜய்க்காகவே சேலைக்கட்டி வருவாள்... அவனுக்கு பிடிக்கும் என்று. இப்படியாக ஒருமாதம் முடிந்த நிலையில்

ஒருநாள் இரவு நேர ட்யூட்டி முடிந்து அவளது துணைக்கு என்று அஜய் வந்தான். அதே அந்த மரங்களடர்ந்த பகுதியில் இருவரும் வண்டியை நிறுத்திக்கொள்ள...

பேச்சுக்களற்ற மௌனம் இருவரிடமும்.

அஜயோ மெதுவாக அவளதருகில் வந்து

டாக்டர் "எனக்கு வரவர தூக்கமே வரமாட்டுக்கு என்ன மருந்து சாப்பிடனும்" என்றுக்கேட்க.

காவ்யா என்ன சொல்றாங்க என முழிக்க, சட்டென்று அவளைத்தூக்கி தனது வண்டியின் மீது வைத்தவன், அவளது கால்களுக்கிடையில் தன்னை நுழைத்து அவளது தலையைப் பின்பக்கமாக பிடித்துக்கொண்டு, அப்படியே அவளது வாயோடு வாய் வைத்து கவ்விக்கொண்டான்.

காவ்யாவோ இவனுக்குள்ள இப்படியொருக் காதல் மன்னனா என்று தனது கண்களை தானக மூடிக்கொண்டவள் 

அந்த எச்சில் பரிமாற்றத்தை ரசிக்கத் தொடங்கினாள்.

இப்பொழுதோ அவனது கைகள் அவளது புடவைக்குள் சொல்ல, பயந்து தடுக்க, கண்களினால் கெஞ்சிப் பேசினான், அவளோ அவனது பாவனைகளை பார்த்துக்கொண்டிருக்க, சந்தடி சாக்கில் அவனது கை மேல் நோக்கி நகர்ந்து அல்லி மொட்டுக்களை பிடித்துக்கொண்டது.

வெடுக்கென்று அவளது தேகம் திண்டாட, பிடிமானத்திற்காக அவனையே பிடித்துக்கொண்டாள். அவனும் மெதுவாக பிடித்து அவளுக்கு வலிக்காது அழுத்த... ஆணின் கரம் செய்யும் இம்சைகளை முதன்முதலில் அனுபவிக்க, தனது உதடுக்கடித்து ரசிக்க, அதுவே அவனுக்கு இன்னும் முன்னேற தூண்டியது.

அவளால் அங்குமிங்கும் நகரமுடியாமல் இருக்க, அவனது கரங்களில் விரும்பியே இருந்துக்கொண்டாள்.

“ டாக்டரு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு இந்த வியாதிக்கு எனக்கு மருத்துவம் பாரு” என்றவன் அவளை வண்டியிலிருந்து இறக்கிவிட்டான்...

காவ்யாவோ வெட்கத்தோடு அவனது புஜத்தில் குத்தி “ஃப்ராடு” என்று சிரித்தாள்.

அவளை வீடுவரைக்கும் கொண்டுவிட்டான்.

அடுத்தநாள் தங்களது வேலையில் மும்முரமாக இருக்கவும், மாலை ஒரு நான்கு மணிவாக்கில் காவ்யா அஜய்க்கு அழைக்க எடுத்துப் பேசியவனுக்கு எதிர்பாரத செய்திக்கிடைத்தது அவளிடமிருந்து...

“ சரி நீ ஒன்னுமே செய்யாத, வந்து பார்த்திட்டுப்போகட்டும்... நான் எதாவது ஏற்பாடு பண்றேன்” என்று போனை வைத்துவிட்டான்.

உடனே ஷ்ரவனின் கேபினிற்கு அவசரமாக சென்றவன் ஷ்ரவனிட்ம் “காவ்யாவை பொண்ணு பார்க்க வர்றாங்ளாம், அவளுக்கே இப்போதான் சொன்னாங்களாம், அவங்கப்பா எல்லாம் பேசி முடிச்சிட்டாங்களாம்... சும்மா பார்மாலிடிஸ்க்குத்தான் இப்போ வர்றாங்களாம் 

இப்போ என்னடாப் பண்றது” என சொல்லி யேசித்து நின்றான்... கொஞ்ச நாள் காதலிக்க விடுறானுங்களா பாரு... காதல் சொன்னவுடனே பின்னாடியே பிரச்சனையும் வருது என்று சலித்துக்கொண்டான்.

மாலை வேலை முடிந்து அஜய் வீட்டிற்கு செல்ல பைக்கில் சென்றுக் கொண்டிருக்கும்போது பின்னாடி கார் ஒன்று வேகமாக வரவும் கண்ணாடியில் பார்த்தவன் அவசரமாக சாலை ஓரத்தில் ஒதுங்கவும், கீழே விழுந்துவிட்டான்.

அடி ஒன்றுமில்லை என்றாலும் வண்டியிலிருந்து விழுந்ததில் கை நன்றாக வலிக்க ஆரம்பித்து இருந்தது மெதுவாக தனது போனை எடுத்து ஷ்ரவனுக்கு அழைத்தவன்,

விசயத்தை சொல்லி “கை கொஞ்சம் வலி எடுக்கு, வண்டி ஓட்ட முடியல நீ வந்து என்னை கூட்டிட்டு போறியா” என்று கேட்டான். அவ்வளவுதான் பாதி வழியில் சென்று கொண்டிருந்த அவன் வண்டியை திருப்பி அஜய் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

ஷ்ரவனுக்கோ அஜயை அப்படி பார்த்ததும், “பார்த்து வர மாட்டியா டா, கனவு கண்டுட்டு வந்தியா?..” என்று அவனை சரமாரியாக திட்ட ஆரம்பித்துவிட்டான்.

அஜயோ “ பார்த்ததுனாலதான்டா உயிரோட இருக்கேன். கண்ணாடி வழியே பின்னாடி இருந்து ஸ்பீடா வந்ததைப் பார்த்து தான் வண்டிய ஒதுக்கினேன்... அதுக்குள்ள வண்டியோடு சரிந்து விழுந்து விட்டேன்” என்றான்.

ஷ்ரவன் திரும்பவும் கேட்டான். “உன் பின்னாடியே வேகமா வண்டி வந்தாலும், நீ இவ்வளவு ஒதுங்க வேண்டிய தேவையே இல்லையே... இது பெரிய ரோடுதான” என்று கேட்டான்.

அஜயோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ரோட்டை கண்களாலே அளந்தவன் அது ஒரு பெரிய பாதை அதில் இரண்டு வண்டியே ஒரே நேரத்தில் போகுக்கூடிய அளவிற்கான வழி இருந்தும் அஜயின் அருகே வேண்டுமென்றே வந்தமாதிரி இருந்தது.

“ சரி வா” என்று வண்டியை அங்கேயே விட்டுவிட்டு, மெக்கானிக்கை அழைத்து சொல்லிவிட்டான். தனது காரில் கிருஷ்ணாவின் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றான். பெரிதாக ஒன்றும் இல்லை கையை கீழே ஊன்றியதால் லேசாக வீங்கி வலி இருந்தது அதற்காக மருந்து கொடுத்து அனுப்பி விட்டனர்.

ஷ்ரவன் இரவில் ஹரிதாவுக்கு அழைத்தான் அவனுக்கு அவளில்லாத பொழுதுகள்... எதையோ இழந்தது மாதிரி இருக்கவும் போனில் அழைத்துவிட்டு அமைதியாக இருந்தான்.

ஹரிதா " த்தான் போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க. பாப்பா பிறந்தப்புறம் நான் வேலைக்கு போகமாட்டேன்” என்றாள்.

அதற்கு ஷ்ரவன் பதிலேதும் சொல்லாமல், காவ்யாவை பற்றி விசாரித்தான்.

“ காவ்யாவை பத்தி நீங்க ஏன் விசாரக்கறீங்க” என்று ஹரிதா கேட்கவும்.

அதுவா “ உன் பிரண்ட் என் பிரண்ட்ட காதலிக்குறா... இரண்டுக்கும் பத்திக்கிச்சு லவ்வு...” என்று இன்று அஜய்க்கு நடந்ததையும் அவளிடம் பகிர்ந்துக்கொண்டான். அவளுக்குமே சந்தோஷம் அஜயினை நன்குத் தெரியுமாதாலால்...

ஹரிதா " ஷ்ரவன்"

ஷ்ரவன் "ஏன்டி ஒன்னு அத்தானுக் கூப்பிடு, இல்லன ஷ்ரவன்னு கூப்பிடு... ஒரு நேரம் அத்தானு கொஞ்சுற, இன்னோரு நேரம் எதோ ஷ்ரவனு சொல்ற" என விசனப்பட்டான்.

ஹரிதா "ஓகே த்தான் காவ்யா அப்பா அரசியலில் கொஞ்சம் பெரிய ஆளு, அதைவிட அவங்க கன்னடத்துக்காரங்க,

ரொம்ப வித்தியாசம் பார்ப்பாரு... நானே அவங்க வீட்டுக்குப் போறதில்லை, அவாதான் நம்ம வீட்டுக்கு வருவா...அவங்கப்பா கொஞ்சம் டெரர்தான்."

இப்போது ஷ்ரவனுக்குப் புரிந்துப்போனது... அஜய் எப்படி கீழே விழுந்திருப்பான் என்று.

ஷ்ரவன் சரியாக யூகித்தான்,அவள் ஹோட்டலில் இருக்கும்போதே. அவளது அப்பாவிற்கு தகவல் போயிட்டு. அவங்கப்பாவின் அரசியல் விசுவாசிதான் பார்த்துவிட்டுப் போட்டுக்கொடுத்தது.

காவ்யா இரவில் அஜய்க்கு அழைத்து, “இன்னும் இருபது நாளில் கல்யாணம்னு எல்லாம் முடிவு செஞ்சிட்டாங்க...

அப்பா நான் பேசுற எதைவுமே காதுகொடுத்து கேட்கமாட்டுக்காங்க... முடிவை மாத்தமாட்டாங்களாம், ஹாஸ்பிட்டல போகவேண்டாம்னு சொல்லிட்டாங்க" என போனிலயே சொல்ல ஒரே அழுகை.

அவள் போன் செய்து அடுத்த அரைமணிநேரத்தில் அஜய் ஷ்ரவன் வீட்டிலிருந்தான்.

இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுத்திருந்தனர்...

ஏனென்றால் அஜய் பற்றிய உண்மைகள் தெரியும்போது... இவ்வளவு அந்தஸ்துபேதம் பார்க்கின்ற காவ்யாவின் தந்தை சம்மதிக்க மாட்டார்.

அஜய் அமைதியாக இருக்கவும், ஏன்டா அமைதியா இருக்க... “ என் நண்பன் முதன்முதலா ஆசைப்பட்டிருக்கான்,

அதுவும் அவனோட வாழ்க்கை, நான் பார்த்துக்குறேன்” என்று அஜயை சமாதானப்படுத்தியிருந்தான்.

அஜயை முதன் முதலில் பார்த்தது சென்னையில் படித்த பொறியியல் கல்லூரியில்தான். எந்தவித ஆர்ப்பாட்டமில்லாதவன்... ஷ்ரவனின் வேவ்லென்த்தோடு ஒத்துப்போனவன்.

மெல்ல மெல்ல அஜயின் குடும்ப விசயங்கள் தெரிந்தபின்... ஷ்ரவனுக்கு அஜய் உயிர்த்தோழன் ஆனான்.

அஜயின் அம்மா கீதாவிற்கு குழந்தையில்லை என்று அவரது கணவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்... அதன் பிறகு இரண்டாவது மனைவியின் மூலமாக அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் கீதாவிற்கு அங்கு முக்கியத்துவமில்லாது போகவும், கணவனிடமிருந்து பிரிந்துவந்து அவருக்கு இருந்த சொத்துக்களை விற்று பெங்களூருவில் இருந்த, அவரது சொந்தக்கார அண்ணனின் உதவியால் வீடுவாங்கி ஒரு ஆபிஸில் வேலையிலும் சேர்ந்தார் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாதென்று.

அதன்பின் அஜயை தெரிந்தவர் மூலமாக தத்தெடுத்தார் தன் பிள்ளையாக... ஆம் அஜய் கீதாவாவின் வளர்ப்பு பிள்ளை. கீதாவின் கணவர் அது தெரிந்து வருந்துவார்... இதை முதலிலே செய்திருக்காலாமோ என்று.

அஜயின் படிப்பிற்கு அவர்தான் உதவினார்.கீதா அதைத் தடுக்கவில்லை.

தாய் மட்டும் என்று சொல்லி வளர்க்க முடியாத சூழலில் கணவரின் உதவியை அஜய்க்காக ஏற்றுக்கொண்டார்.அதுவும் அவனது படிப்பிற்காக மட்டுமே. அந்த பணத்தையும் வேலைக்கு சென்று திருப்பிக் கொடுத்துவிட்டான்.

இந்த விசயம் தெரிந்தால் கண்டிப்பாக காவ்யா அப்பா சம்மதிக்கவேமாட்டார்.

அதைத்தெரிந்து ஷ்ரவன் சில ஏற்பாடுகளை செய்தான்... அதுதான் அவனுக்கே வினையாக போயிற்று